தேனி மாவட்டத்தில் உறுதிமொழி ஏற்பு
தேனி, அக்.2- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரிய குளம், போடி, கம்பம், பாளையத்தில் சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பெரியகுளத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் இந்தியாவுக்கான மக்கள் இயக்கம் சார்பாக மாலை அணிவித்து, மக்கள் ஒற் றுமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.ராமச்சந்திரன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கிளைச் செயலாளர் பி.சசிக்குமார், இந்தியா வுக்கான மக்கள் இயக்கத் தலைவர் மு. அன்புக்கரசன், கிளை தலைவர் என்.நாக பாண்டி, சிஐடியு மாவட்ட பொருளாளர் சு. வெண்மனி, சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாவட்ட துணைத் தலைவர் எஸ். எம்.செளக்கத் அலி, ஏ.மன்னர் மன்னன், ஜே.கதிஜா பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உத்தமபாளையத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் ஜி.எம். நாகராஜன் தலைமையில் மாவட்டச் செய லாளர் எஸ்.எம்.இப்ராகிம், பொருளாளர் பி.ஜோசப், இணைச் செயலாளர் டி.கே. ஶ்ரீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஜெகநாதன், மீனாட்சிசுந்தரம், காம ராஜ், பேராசிரியர் முகமது ஷரீப், மக்கள் ஒற்றுமை மேடை எஸ்.லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கம்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ஶ்ரீராமன், இம்ரான் கான், போடியில் கே.ராஜப்பன், எஸ்.கே. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
