tamilnadu

கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல்

மதுரை, மார்ச் 21-  கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பத்துப் பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட பத்துப் பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், “ இந்த வழக்கில் நோக்கம், சிசிடிவி காட்சிகள், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலை மறைவாக இருந்தது  ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை  நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த  வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக  நாங்கள் சிறை யில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்ட னையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கி யும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியுள்ளனர். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சிபிசிஐடி காவல்துறை மற்றும் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசார ணையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.