tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கனிமொழிக்கு பெரியார் விருது

சென்னை: செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெற  உள்ள திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் விருதுகள்  பட்டியலை தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,  திமுக எம்.பி., கனிமொழி கருணாநிதிக்கு பெரியார் விருதும்,  சுப.சீத்தாராமனுக்கு அண்ணா விருதும், சோ.மா. ராமச் சந்திரனுக்கு கலைஞர் விருதும், குளித்தலை சிவராமனுக்கு  பாவேந்தர் விருதும், மதுரர் ராமலிங்கத்திற்கு பேராசிரியர் விருதும், பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருதும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்குவார்.

தமிழகத்தில் உயர வாய்ப்பில்லை!

சென்னை: ஒன்றிய அரசின் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி, அகில இந்திய ஒதுக்கீட்டில் கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் சேர்க்கப்படுவதால் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தாமதமாகும் என அறிவித்துள்ளது. முதற்கட்ட கவுன்சிலிங் கில் நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்று தமிழக அளவில்  முதலிடம் பிடித்த திருநெல்வேலியை சேர்ந்த சூர்யநாரா யணன் தில்லி எய்ம்ஸில் இடம் பெற்றார். எனினும், தமிழ கத்தில் மருத்துவ இடங்கள் உயர வாய்ப்பில்லை என்று மாநில மருத்துவ கல்வி இயக்குநர் தேரணிராஜன் தெரிவித் தார்.

வந்தே பாரத் பார்சல் ரயில் தயார்

சென்னை: நாட்டின் முதல் வந்தே பாரத் பார்சல் ரயில்  சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாராகி விட்டதாக அதிகாரி கள் தெரிவித்தனர். ஓரிரு மாதங்களில் இந்த ரயில் இயக்கத் திற்கு வரும். 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், மணிக்கு  160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஒரே  நேரத்தில் 264 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லலாம். உணவு  பொருட்கள் பதப்படுத்தும் வசதியும் இதில் உள்ளது. முதல்  கட்டமாக மும்பை, தில்லி மண்டலங்களில் இயக்க திட்ட மிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘விஜய் பேச்சில் பண்பாடு இல்லை’

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வல்லம் பகுதியில் உள்ள பெரி யார் மணியம்மை பாலிடெக்னிக்கிற்கு வருகை தந்த திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி, செய்தியாளர்களிடம் பேசும் போது, விஜய் முதலமைச்சரை எப்படி அழைப்பது என்று தெரியாத அளவிற்கு பண்பாடற்ற முறையில் பேசுவதாக குற்றம் சாட்டினார். மேலும், விஜயின் பேச்சு வழக்கத்தை கடு மையாக விமர்சித்துள்ளார். “சினிமா டயலாக் பேசியே  பழக்கப்பட்டவர்கள் இதையும் ஒரு திரைப்பட டயலாகாகவே  பேசுகிறார்கள்” என்று வீரமணி கூறினார். புதிதாக அரசிய லில் வந்தவர் தனது கொள்கையை தெளிவாக சொல்ல வில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒன்றிய அமைச்சர்  அமித் ஷாவின் திராவிடத்தை வேரோடு பிடுங்கி எறிவோம்  என்ற கூற்றையும் வீரமணி கடுமையாக விமர்சித்தார்.

‘எனக்கு இரண்டு தாய்கள்’

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் நடைபெற்ற திமுக மாணவர் அணி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர், “தேசிய கல்விக் கொள்கையின் மூன்று  மொழிக் கொள்கையை விமர்சித்த அவர், மற்றொரு மொழி  என்பது எது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். எனக்கு 6 மொழி தெரியும். ஆனால் என் தாய்மொழி தமிழ்தான் என்று அவர் வலியுறுத்தினார். என்னை பலர்  என்னென்னவோ சொல்லி கூப்பிடுகிறார்கள். எல்லாம்  எனக்கு பொருந்தும். எல்லா வேஷமும் நான் போட்டிருக் கிறேன்” என்று கூறினார். சினிமா மற்றும் இந்திய தாய் என  இரு தாய்களும், தனது இரு தோள்களில் இருக்கும் என்றும்  அவர் தெரிவித்தார்.

அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை: போலி சான்றுகள் கொடுத்து கல்வித் துறை யில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிபுரிவதாக தகவல் கிடைத்துள்ளதால், நடப்பாண்டிற்குள் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை சோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி யுள்ளது.

புதிய விமான நிலையம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் விமான  நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்திருக்கும்  தமிழ்நாடு அரசு, அடுத்த இரண்டு வாரங்களில் ஒன்றிய அர சின் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி அனுமதி கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

கேட்’ நுழைவுத் தேர்வு

சென்னை: முது நிலை பொறியியல் படிப்பில் சேர 2026 ஆம்  ஆண்டுக்கான கேட் நுழைவுத்தேர்வு பிப்.7,8  மற்றும் 14, 15 ஆகிய  தேதிகளில் நடைபெறு கிறது. இந்நிலையில், அதற்கான விண்ணப்ப பதிவு திங்களன்று (ஆக. 25) முதல் தொடங்கு கிறது. www.gate.2026.iitg.ac.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு செய்யலாம்.

நேர்மைக்கு பாராட்டு

திருப்பூர்: காங்கே யம் பகுதியில் பேக்கரி  ஒன்றில் செல்வராஜ் என்பவர் மகளுடன் டீ  குடித்துக் கொண்டிருந்த  போது, சாலையோரத் தில் கீழே கிடந்த ஒரு மஞ்சள் பையை எடுத்து  பார்த்துள்ளார். அதற்குள் கட்டுக்கட்டாக ரூ.1.50 லட்சம் பணம் இருந்துள்ளது. உடனடி யாக அந்தப் பணத்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத் தார். அந்த நபரையும் மகளையும் காவல்துறை யினர் சால்வை அணி வித்து பாராட்டினர்.

கணக்கெடுப்பு

சென்னை: பள்ளி மாணவர்களிடையே போதைப் பழக்கம் உள்ளவர்கள் குறித்து,  மதுவிலக்கு மற்றும் கலால் துறை கணக் கெடுப்பு நடத்த பள்ளிக்  கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. மது விலக்கு துறை கேட்கும் கேள்விகளுக்கு செப்.10 -க்குள் உரிய பதில்கள்  அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.

வேன் கவிழ்ந்து விபத்து:  35 பேர் காயம்

சாத்தூர்: தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டி  அருகே கழுகுமலை  வடக்கு அழகுநாச்சியார் புரம் பகுதியைச் சேர்ந்த வர்கள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரு கேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவி லுக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை ஆலங்குளம் இந்திரா காலனியை சேர்ந்த மாரிச்சாமி ஓட்டி யுள்ளார். வேன் நல்லி  அருகே 4 வழிச்சாலை யில் வந்தபோது பின் பக்க டயர் திடீரென வெடித்து வாகனம் நிலை  தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் குழந் தைகள் உட்பட 35 பேர் காயம் அடைந்தனர்.