tamilnadu

img

பல தலைமுறையாக வழிகாட்டும் பெரியாரின் சமூக நீதிப் போராட்டங்கள்! பினராயி விஜயன் புகழாரம்மதுரை

பல தலைமுறையாக வழிகாட்டும் பெரியாரின் சமூக நீதிப் போராட்டங்கள்! பினராயி விஜயன் புகழாரம்

திருவனந்தபுரம், செப். 17 - பெரியாரின் போராட்டங்கள் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.  தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது. பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியாரின் சிலைக்கு அரசு சார்பில் கோட்டயம் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.