tamilnadu

img

சாதிய அணிதிரட்டல்களை முறியடிப்பதே பெரியாருக்கு ஆற்றும் பெருங்கடமை!

சாதிய அணிதிரட்டல்களை முறியடிப்பதே பெரியாருக்கு ஆற்றும் பெருங்கடமை!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமது சமூக வலைதள பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். “தந்தை பெரியாரின் பிறந்த நாள், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அவருடைய சிந்தனைகளை நினைவு கூரும் விதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசாங்கம், சமூக நீதி நாளாக இந்த நாளை அறிவித்துக் கடைப்பிடிக்கிறது. பெரியாரின் பெயரால் உறுதிமொழி கொள்ளும் இந்த நாளில், பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண் விடுதலை, மொழி உரிமை உள்ளிட்ட, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் முன்வைத்த சிந்தனைகளை வலுப்படுத்த வும், தொடர்ந்து முன்னெடுக்கவும் உறுதி மொழிய வேண்டும். நாடு முழு வதும் இந்துத்துவ இருள் கவிந்து வரும் சூழலில், அத்தகைய பிற்போக்குச் சிந்தனைகள் தமிழ்நாட்டிலும் தாக்கம் செலுத்து கின்றன. குறிப்பாக, ஆணவக் கொலை கள், தமிழ்நாட்டில் தொடர்கதையா கின்றன. தற்போது முன் மயிலாடுதுறை யில் வைரமுத்து என்ற இளைஞர் ஆணவக் கொ லை செய்யப்ப ட்டிரு ப்பது அதிர்ச்சி யை ஏற்படுத்துகிறது. இத்தகைய நிலைமையை மாற்றி யமைக்க, சாதிய ஒடுக்குமுறைக்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிரான சமூகநீதிப் பிரச்சாரத்தைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பிற முற்போக்கு சக்திகளும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிட வேண்டும். இனியும் இந்தச் சட்டத்தை நிறைவேற்றக் காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல. மேலும், தமிழ்நாட்டு இளைஞர் களும், இளம்பெண்களும் சாதிய ஒடுக்குமுறைக்கும், பெண்ணடி மைத்தனத்திற்கும், ஆதிக்கப் பண்பாட்டு  எச்சங்களுக்கும் எதிராக உறுதி யாகக் களம் இறங்குவதுடன், சாதிச்  சிந்தனைகளுக்கும், சாதிய அடிப்படை யிலான அணிதிரட்டல்களுக்கும் எதிராக உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டும். அதுவே பெரியாருக்கு நாம் ஆற்றும் பெரும் கடமையாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.