கடலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர்களை பாதிக்கும் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஒன்றிய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு கூட்டமைப்பின் தலைவர் டி.புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஆர்.மனோகரன், மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
