tamilnadu

img

ஆக.18 இல் ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆக.18 இல் ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல்லில் நடந்த மாநில மாநாட்டில் அறிவிப்பு


திண்டுக்கல்,ஜூலை 3- 23 மாத கால ஓய்வூதிய பணப்பலன் களை பெறுவதற்காக ஆகஸ்ட் 18 ஆம் தேதி அனைத்து போக்குவரத்து அலு வலகங்கள் முன்பும் காத்திருப்புப் போராட் டம் நடத்தப்பட உள்ளது என்று சிஐடியு மாநி லத்தலைவர் அ.சவுந்தரராசன் அறிவித்தார். சிஐடியு சார்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு ஜூலை 3 அன்று திண்டுக்கல் நாயுடு மகாஜன மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 11 கோரிக்கைகள் தீர்மானங் களாக நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம்  சிஐடியு மாநி லத்தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது: “23 மாதங்களாக காத்திருக்கும் ஓய்வூதியர்களின் பணப்பலன்கள் உடனடி யாக வழங்கப்பட வேண்டும். அரசு தலை யிட்டு நியாயமான தீர்வு காண வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.  “தொழி லாளர்களின் கிராஜூவிட்டி நிதி 15 ஆயிரம் கோடி ரூபாய் தகுந்த முறையில் பயன் படுத்தப்பட வேண்டும். இந்த நிதியை மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது தவறானது” என்று அவர் கூறினார். போக்குவரத்துத் துறையில் தனியார் மயமாக்கலை கண்டித்த அ.சவுந்தரராசன், “மின்சார பேருந்துகள் மற்றும் புதிய போக்கு வரத்து சேவைகள் அரசு போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்பட வேண்டும். இது மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை தொடர்ந்து பெற உதவும்” என்றார். “ஓய்வூதியர்களுக்கு தகுந்த வசதிகள் மற்றும் நலன்கள் வழங்க வேண்டும். ஓய்வூ தியர் இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும். அரசு ஓய்வூதியர்களுக்கும் இல்லங்கள் அமைக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். ஜூலை 9 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் போக்குவரத்துத் துறை ஓய்வூதியர்கள் பங்கேற்கின்றனர். ஜூலை 17 அன்று கோரிக்கைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆகஸ்ட் 18  போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும்.   10 ஆண்டுகளாக காத்திருப்பு “10 ஆண்டுகளுக்கும் மேலாக போக்கு வரத்து  தொழிலாளர்கள் பொறுமையாக காத்திருந்துள்ளனர். பணப்பலன் கிடைக்காததால் அவர்கள் கடனாளிகளாக மாறியுள்ளனர். இந்த நிலைமை மாற வேண்டும்” என்று அ.சவுந்தரராசன் தெரி வித்தார். “அரசு உறுதிப்பாடு அளிக்காத பட்சத்தில் போராட்டம் நீடிக்கும். 23 மாத கால பணப்பலன்களை வழங்குவது குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வேண்டும்” என்று அவர் கோரினார். “போக்குவரத்துத் துறை தனியார்மய மானால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும். சமூக நீதி அமலாக வேண்டும் என்றால் பொதுத்துறை நிறுவனங்கள் தேவை” என்று அவர் கூறினார்.  மாநாட்டில் பங்கேற்றோர் மாநாட்டிற்கு சந்திரன் தலைமை வகித்தார். ஆர்.பால்ராஜ் வரவேற்றார். வி.பிச்சை மாநாட்டு நோக்கம் குறித்து உரை யாற்றினார்.  சிஐடியு அரசு போக்கு வரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் நிறை வுரையாற்றினார். கோட்டப் பொதுச்செய லாளர் என்.ராமநாதன் நன்றி கூறினார். திண்டுக்கல் கோட்டத்தலைவர் ஐ.ஜெயக் குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களி லிருந்து ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.