மார்க்சிஸ்ட் இதழுக்கான சந்தா தொகை ரு.52,320 வழங்கல்
திருச்சிராப்பள்ளி, செப்.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக் குழு சார்பில், தோழர் சீத்தா ராம் யெச்சூரி நினைவு பேர வை கூட்டம், கண்தானம், உடல் தானம் உறுதிமொழி பத்திரங்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்சிஸ்ட் சந்தா வழங்கும் நிகழ்சி ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி கள் திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். கண்ணொளி செல்வ ராஜ், கண் தானம் குறித்து பேசி, கண் தானம் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். பின்னர், அவரி டம் தோழர்கள் 52 பேர் கண்தான உறுதிமொழி பத்தி ரங்களை வழங்கினர். இதே போன்று, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்து வக் கல்லூரி உடற்கூராய்வுத் துறை பேராசிரியர் டாக்டர் ஆனந்தி, உடல் தானம் செய்வது குறித்து பேசி, உடல் தானம் குறித்த சந்தே கங்களுக்கு விளக்கம் அளித் தார். பின்னர் அவரிடம் தோழர்கள் 26 பேர், உடல் தானத்திற்கான உறுதி மொழி பத்திரங்களை வழங்கினர். பேரவையில், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். முன்னதாக, 327 மார்க்சிஸ்ட் சந்தாவிற்கான தொகை ரு.52,320, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு, மாவ ட்டக் குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் மற்றும் தோழமை சங்கத்தி னர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தானம் நன்றி கூறினார்.