பஞ்சாயத்து ஊராட்சி செயலருக்கு கருவூலம் வழியாக ஊதியம் வழங்கிடுக
அரசு ஊழியர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட பேரவை வலியுறுத்தல்
காஞ்சிபுரம், செப்.13- பஞ்சாயத்து ஊராட்சி செயலருக்கு கருவூலம் வழியாக ஊதியம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட பிரதி நிதித்துவ பேரவை வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் சனிக்கிழமையன்று (செப் 13) காஞ்சிபுரம் பூமாலை வளாகத்தில், தோழர்கள் இரா.சீனிவாசன், எம்.பாலகிருஷ்ணன் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி வகித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தெ.வாசுகி பேரவையை துவக்கி வைத்து பேசினார். அதற்கு முன்னதாக வட்ட கிளைத் தலைவர் எஸ்.டில்லி பாபு வரவேற்றார், மாவட்டத் துணைத் தலை வர் சீதா சீனிவாசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் துரை.மருதன் வேலை யறிக்கையையும் பொருளாளர் வே.வெங்க டேஷ் வரவு-செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ரமணி, மாவட்டத் தலைவர் வி.நீலா வதி, மேனாள் மாவட்ட பொருளாளர் வி.குமார், வருவாய்த்துறை சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.நவீன் குமார், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் தா.கண்ணன், அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் வி.ஏ.சுந்தரவடி வேல், ஜெ.துரைவேல், ஏ.சாந்தகுமாரி ஆகி யோர் வாழ்த்திப்பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் மு.பாஸ்கர் நிறைவுரை யாற்றினார். மாவட்ட துணை ததலைவர் வி.முத்து சுந்தரம் நன்றி கூறினார். மாவட்ட மகளிர் பேரவை காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் துணைக் குழு பேரவை சி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட மக ளிர் துணைக்குழு உறுப்பி னர் கே.பூங்கொடி வர வேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் எம்.ஆர்.திலகவதி வேலை அறிக்கையை சமர்ப்பி த்தார். மாநில மகளிர் துணைக்குழு துணை தலை வர் தெ.வாசுகி, மாவட்ட பொருளாளர் கோ.கௌரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மகளிர் துணை குழு உறுப்பினர் எ.நூர்பி நன்றி கூறினார். தீர்மானம் அரசுத் துறையில் காலி யாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊர்புர நூல்கள், வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி செவிலியர், மல்டி பர்ப்பஸ் ஒர்க்கர்ஸ், மருத்துவமனை அடிப்படை ஊழியர்கள் அனைவருக்கும் வரை யறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மேலும் கொத்தடிமை ஊதிய முறையை ஒழிக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடத்தப்படும் ஆய்வு கூட்டம், மற்றும் இணைய வழி ஆய்வு கூட்டங்களை பணி நேரத்தினை கடந்தும், அரசு விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதை முற்றிலும் கைவிட வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள் இப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.