tamilnadu

img

நீட் விலக்க மசோதா நிறைவேற்றம்

சென்னை, பிப்.8- தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியதற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சியினருக்கும், தமிழக முதல்வருக்கும் இந்திய மாணவர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர்  ஏ.டி.கண்ணன் செயலாளர் வீ.மாரி யப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு களாக நீட் தேர்வை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை, இந்திய மாணவர் சங்கம் நடத்தி வருகிறது.  மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரம் பேருக்குமேல் வழக்குகள்   பதியப்பட்டது. நூறுக்கு மேற்பட்ட தோழர்கள்  சிறை சென்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாணவர் களும், ஜனநாயக அமைப்புகளும் எதிர்ப்பை பதிவு செய்தன. இதன்  விளைவாய் தமிழக அரசு கடந்தாண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நீட்  தேர்வி லிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை சட்டமன்ற த்தில் ஒரு மனதாக நிறைவேற்றியது. அன்றே கிடைக்கப்பெற்ற இத்தீர்மானத்தை ஆளுநர் ஐந்து மாதங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போட்டு உப்பு சப்பில்லாத காரணங் களை கூறி மீண்டும் தமிழக சட்டமன்றத் திற்கே திருப்பி அனுப்பினார். பொதுப்பட்டியலில் உள்ள கல்வி மீதான இத்தகைய மசோதாவை ஆளு நர் மாநில மக்கள் நலன் கருதி குடி யரசு தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் செய்ய தவறிவிட்டார்.  தமிழக அரசும் அனைத்து கட்சி களும் தற்போது (பிப்ரவரி 8) இத்தீர்மா னத்தை மீண்டும்  ஒருமனதாக நிறை வேற்றியுள்ளனர். இதனை தமிழக மாணவர்களின் சார்பில் வரவேற் கிறோம்.  தமிழக ஆளுநர்  உடனடியாக இத்தீர்மானத்தை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். மேலும் குடியரசு தலைவர்  எட்டு  கோடி தமிழக மக்களின் உணர்வை மதித்து உடனடியாக நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.