சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இறுதியில் பவோலினி
100 ஆண்டு பழமையான சர்வ தேச டென்னிஸ் தொடர்க ளில் ஒன்றான சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்திய நேரப்படி திங்களன்று அதி காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் பவோலினி, தரவரிசையில் இல்லாத முன்னணி வீராங்கனையான ரஷ்யாவின் வெரோனிக்காவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்ட த்தில் 6-3, 6-7 (2-7), 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற பவோ லினி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் பவோலினி - போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்கை எதிர் கொள்கிறார்.
இந்திய வம்சாவளிக்கு பட்டம் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் திங்க ளன்று அதிகாலை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தரவரிசை இல்லாத ஜோடிகளான இத்தாலி யின் முஸ்ஸட்டி - சோனேகோ, அமெரிக்காவின் ராஜீவ் ராம் (இந்திய வம்சாவளி) - குரோஷியாவின் மெக்டிக்ச் மோதின. 4-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் ராஜீவ் ராம் - மெக்டிக்ச் ஜோடி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கேப்ரில்லா ஜோடி சாம்பியன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள கனடாவின் கேப்ரில்லா - ஆஸ்திரேலியாவின் எரின் ஜோடி, தரவரிசையில் இல்லாத சீனாவின் ஹன்யு - ரஷ்யாவின் பனவோ ஜோடியுடன் மோதின. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கேப்ரில்லா - எரின் ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
விளையாட்டின் மூலம் வேகமாக பரவும் வெறுப்பு'
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடக் கூடாதாம்
இந்தாண்டு செப்டம்பர் மாதம் 17ஆவது சீசன் ஆடவர் ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் (குரூப் ஏ) இடம்பெற்றுள்ளன. செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் லீக் போட்டியும் நடைபெற உள்ளன. இந்நிலையில், ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடவே கூடாது என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடவே கூடாது என விரும்புகிறேன். இந்தியா எங்கு விளையாடி னாலும் வெற்றி பெறும். ஆனால் இந்தப் போட்டி யை விளையாடவே கூடாது. விளையாடவும் மாட்டார்கள். நம்பிக்கையுடன் சொல்கிறேன்” என இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யமுடிவெடுக்கப்பட்டுள்ளது போன்று கூறியுள்ளார். ஆனால் இதுபோன்ற கருத்துக்கள் விளையாட்டின் மூலம் வேகமாக பரவும் வெறுப்பு என நாடு முழுவதும் சமூகவலைத்தளங்களில் கண்டனம் குவிந்து வருகின்றன.