சட்டமன்றத் தொடரின் அடுத்தக் கூட்டத்தில் சாதி ஆணவக்கொலை தடுப்புச்சட்டத்தை இயற்ற பெ.சண்முகம் வலியுறுத்தல்
சென்னை, ஆக.25 - சாதி ஆணவக்கொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை வரவிருக்கிற சட்ட மன்றக் கூட்டத்தொடரிலேயே நிறை வேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். ‘ஆணவக்கொலைகளுக்கு எதிரான சமூக நீதிக்கருத்தரங்கம்’ ஞாயிறன்று (ஆக.24) சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பெ.சண்முகம் பேசியதாவது: சாதி ஆணவக்கொலையை தடுக்க 2015ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் தனி நபர் மசோதாவை கொண்டு வந்தார். அது விவாதத்திற்கு ஏற்கப்படவே இல்லை. ஆணவக்கொலைக்கு எதி ராக மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. நாள் கணக்கில் பிணவறை கள் முன்பு நீதிகேட்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகவும் நிற்கிறது. ஆண்டுக்கணக்கில் வழக்கை நடத்தி வருகிறது. பட்டியல் சாதியினருக்கும், பிற சாதி யினருக்கும் இடையே மட்டுமே. ஆணவப் படுகொலை நடைபெறுகிறது என்ற தவறான புரிதல் சமூகத்தில் உள்ளது. எந்த ஒரு சாதியைச் சேர்ந்த வரும் மற்றொரு சாதியைச் சேர்ந்த வரை திருமணம் செய்தால் கொலை செய்யப்படுகிறார். பட்டியல் சாதிகளுக் குள்ளும், பிற்படுத்தப்பட்ட சாதி களுக்குள்ளும், பிற சாதிகளுக் குள்ளும் ஆணவக்கொலைகள் நடக்கின்றன. ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச்சட்டம் வேண்டும் என்று சட்டமன்றத்தில் சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகைமாலி வலியுறுத் தினார். அப்போது தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களே போதுமானது என்று அரசின் நிலையை முதல மைச்சர் கூறினார். இந்த நிலையில்தான் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகி யோருடன் சென்று கடந்த 6ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித் தோம். சாதி ஆணவக் கொலையை தடுக்க தனிச்சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி னோம். சுமார் 30 நிமிடம் நடந்த அந்த சந்திப்பில் பிரச்சனைகளை விளக்கி னோம். அதன்பிறகு முதலமைச்சர் உடன்பாடான மனநிலைக்கு வந்த தாக மூவரும் உணர்ந்தோம். ஆகவே, வரக்கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக்கொலை தடுக்க தனிச்சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் அதிக மாக நடைபெற வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். சிபிஎம் திருநெல்வேலி மாவட்ட அலுவல கத்தில் ஒரு திருமணத்தை நடத்தி னோம். பெண்ணின் சாதிக்காரர்கள் வந்து அலுவலகத்தை அடித்து நொறுக் கினர். அதனையும் மீறி சிபிஎம் அலு வலகங்களில் சாதிமறுப்பு திரு மணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கிறது. சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ள இடங்கள் இல்லை. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களை சாதி மறுப்பு திருமணங்களை நடத்திக் கொள்ளும் இடமாக பயன்படுத்திக் கொள்ள லாம். அனைத்து சாதியிலும் முற்போக் காளர்கள், ஜனநாயகவாதிகள், சீர்திரு த்தவாதிகள் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு ஒன்றுதிரட்ட வேண்டும். அப்போதுதான் சாதிவெறி யர்களுக்கு எதிரான பெரும்படையை உருவாக்க முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 240 கொலைகள் நடந்துள்ளதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நிலைமை கைமீறி செல்கிறது. கவின் செல்வகணேஷ் கொலைக்கு பிறகு, ஆணவக் கொலையை தடுக்க சிறப்புச்சட்டம் வேண்டும் என்று கோரிக்கைக்கு ஆதர வான போக்கு வந்துள்ளது. இதை அரசாங்கம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்புச்சட்டத்தை உருவாக்கம் கட்டாயத்தை அரசுக்கு உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத் தூர்மணி, சாதி ஒழிப்பு முன்னணி தலைவர் ரமணி, வழக்குரைஞர் ப.பா.மோகன், திரைக்கலைஞர் சத்யராஜ், இயக்குர் அமீர், எவிடன்ஸ் கதிர், தமிழர் ஆட்சிக் கழக தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன், பத்திரிகையாளர்கள் கவிதா முரளிதரன், ஜெயராணி மற்றும் கௌசல்யா உள்ளிட்டோர் பேசினர்.