tamilnadu

காயமடைந்த 110 பேரில் 51 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு!

காயமடைந்த 110 பேரில்  51 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர்  மீ. தங்கவேல் தகவல்

கரூர், செப். 29 - விஜய் பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கிப்  படுகாயம் அடைந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்த நிலையில், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரி வித்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழ கத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தை கள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 41 பேர் பலியான துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  110 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இந்த 110  நபர்களில், 51 நபர்கள் குணமடைந்து அவர் களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மீ. தங்க வேல் தெரிவித்துள்ளார். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் 51 நபர்களும், அமராவதி மருத்துவமனையில் 2 நபர்களும், அக்சயா மருத்துவமனையில் 5 நபர்களும், அப்பல்லோ மருத்துவமனையில் 1 நபரும்  என மொத்தம் 60 நபர்களுக்கு உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.