tamilnadu

பள்ளி மைதானத்தில் அறிவுசார் மையம் அமைக்க எதிர்ப்பு

பள்ளி மைதானத்தில் அறிவுசார் மையம் அமைக்க எதிர்ப்பு

சேலம், செப்.16- வாழப்பாடி அரசுப்பள்ளி மைதானத்தில் அறிவுசார் மையம் அமைக்க இந்திய மாணவர் சங்கம்  எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மாண வர் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் கே.டார்வின், செயலாளர்  எஸ்.பவித்ரன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், வாழப் பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 800க்கும் மேற் பட்ட மாணவர்கள் படித்து வரு கின்றனர். இங்கு படிக்கும் மாண வர்கள் பள்ளிக்கு சொந்தமான மைதானத்தில் உடற்பயிற்சி, யோகா, சிலம்பம், கால்பந்து, கபடி  மற்றும் 100மீ, 200மீ, 800மீட்டர் தொடர் ஓட்டபந்தயம் போன்ற விளையாட்டிற்கு பயிற்சி மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலை யில், இந்த மைதானத்தில் அறிவு சார் மையம் கட்டுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இந்த அறிவுசார் மையம் அமையவுள்ள இடத்தில் 14  பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன.  அதில், நமது தேசிய மரமான ஆல மரமும் உள்ளது. இம்மரம் தோராய மாக 70 ஆண்டுகளைக் கடந்து நூற் றாண்டை நோக்கி சென்று கொண்டி ருக்கிறது. இப்பள்ளியை சுற்றி யுள்ள அனைத்து பள்ளிகளும் இங்கு வந்து மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளை நடத்தி செல்கின்றனர். அது மட்டு மல்லாமல் வாழப்பாடி வட்டாரத் திலேயே மிக பெரிய அளவிலான மைதானமும் இதுதான். வாழப் பாடியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இங்கு வந்து உடற்பயிற்சி மற்றும்  நடைப் பயிற்சி மேற்கொள்கின்ற னர். காவல்துறை அதிகாரிகளும், விடுமுறை நாட்களில் இங்கு வந்து தான் பயிற்சியினை மேற்கொள் கின்றனர். வாழப்பாடியில் உள்ள பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர் கள் மற்றும் ஊர் பொதுமக்களுக் கும் அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் தாய் மடியாக உள்ளது.  இங்கு பயிற்சி பெறும் விளையாட்டு  வீரர்கள் வட்ட, மாவட்ட, மாநில  அளவில் விளையாடி பதக்கங்க ளும் வென்று பெருமை சேர்க்கின் றனர். மேலும், இப்பள்ளி மைதானத் தில் பயிற்சி பெற்ற மாணவன் கின் னஸ் சாதனை செய்துள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை யில், அறிவுசார் மையம் பள்ளி  மைதானத்தில் கட்டினால் பள்ளி  மாணவர்கள் விளையாட முடியாத  சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். தொடர் ஓட்டங்கள் நடத்துவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்படும் அபா யம் உள்ளது. மேலும், விளையாட போதுமான இடமின்றி கால்பந்து விளையாட்டை கைவிடும் சூழ் நிலை உருவாகும். மேலும், தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025” இல் விளை யாட்டு உள்கட்டமைப்பை மேம்ப டுத்துதல் என்னும் தலைப்பில், அனைத்து பள்ளிகளிலும் அடிப் படை உள்கட்டமைப்பை உரு வாக்கி பராமரித்தலுக்கு தனியே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பள்ளி விளை யாட்டு மைதானத்தில் அறிவுசார் மையம் அமைத்தால், எவ்வாறு பள்ளி மைதானத்தை மேம்படுத்த முடியும்? விளையாட்டு மைதானத் தில் அறிவுசார் மையம் அமைத் தால் அங்கு படிக்க வரும் மாண வர்களுக்கு விளையாடும் மாணவர் களின் சத்தத்தால் கவனக்குறைவு ஏற்படும். தற்போது அறிவுசார் மையம் கட்ட இருக்கும் இடத்தை ஒட்டியவாறே மண்ணெண்ணெய் நிலையமும், உயரழுத்த மின் மாற் றியும் அமைந்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. எனவே அறி சார். மையத்தை பேரூராட்சிக்கு சொந்தமான வேறொரு இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.