பள்ளி வகுப்பறை, ஆய்வக கட்டடம் திறப்பு
தஞ்சாவூர், அக். 6- சென்னையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், காணொலி வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டடம் மற்றும் அகரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வகக் கட்டிடத்தையும் திங்கள்கிழமை திறந்து வைத்தார். மனோஜிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
