ரூ.4.61 கோடி செலவில் 10 நவீன கிடங்குகள் திறப்பு
சென்னை: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மொத்தம் ரூ.60.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 வட்ட செயல் முறை கிடங்குகள், 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் 2 நவீன சேமிப்புக் கிடங்குகளை திறந்து வைத்தார். இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.23.27 கோடியில் 12,500 மெட்ரிக் டன் கொள்ள ளவில் 5 வட்ட கிடங்குகளும், ரூ.30.38 கோடியில் 31,500 மெட்ரிக் டன் கொள்ளளவில் 3 நெல் சேமிப்பு வளாகங்களும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் ரூ.7.20 கோடியில் இரண்டு நவீன கிடங்குகளும் அடங்கும். அதே நேரத்தில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவ னத்தின் பணியாளர்களாக தமிழ்நாடு அரசு பணியா ளர்கள் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 63 நபர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் 55 வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நிய மன ஆணைகளை வழங்கினார்.
கோவில்களின் வரவு-செலவு கணக்கை வெளியிட உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் வரவு-செலவு கணக்குகளை வெளியிடுவதற்காக அறநிலை யத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களின் வரவு-செலவு கணக்கை வெளியிடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1986-ஆம் ஆண்டு முதல் கோவில்களின் வரவு-செலவு கணக்கில் 10 லட்சத்து 80 ஆயி ரம் ஆட்சேபணை கேள்விகள் இருக்கின்றன. இதில் 1,549 கோடி ரூபாய் அளவுக்கு தீர்வு காணப்படவில்லை. நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சௌந்தர் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரணையில், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட அதிக வருமானம் தரக்கூடிய 50 கோவில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் இணைய தளத்தில் வெளியிட உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 18-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
வேளாங்கண்ணி ஆலய திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவையொட்டி 1050 சிறப்பு பேருந்துகள் ஆக.27 ஆம் தேதி முதல் செப்.10 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து இயக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட உள்ளன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் செல்வதற்கு www.tnstc.in என்ற இணைய தளத்திலும் tnstc செயலி மூலமும் முன்பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசரி கணேஷ் மீது மோசடி புகார்
சென்னை: எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ள ஐசரி கணேஷ் மீது சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவல கத்தில் அவரது தங்கை அழகு தமிழ்ச்செல்வி மோசடி புகார் அளித்துள்ளார். அதில், ஐசரி கணேஷ் தன்னை வேல்ஸ் கல்வி குழுமத்தில் இருந்து போலியான சான்றுகளைக் கொடுத்து நீக்கியதாகவும், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் கூறுகை யில், 1987 இல் தந்தை ஐசரி வேலன் காலமான பிறகு அனைத்து சொத்து, வணிகத்தின் பொறுப்பை ஏற்றார். 2017இல் தகாத வார்த்தைகளால் பேசி, போலியான சான்றிதழ் சமர்ப்பித்து கல்வி குழுமத்தில் இருந்து நீக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “நெல்லை யில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06030) செப்டம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை ஞாயிற்றுக்கிழமை மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக, மேட்டுப்பாளை யத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரயில் (06029) செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 1 வரை திங்கட் கிழமை மட்டும் இயக்கப்ப டும். திருச்சியில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (06190) செப்டம்பர் 2 முதல் நவம்பர் 30 வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும். மறுமார்க்கமாக, தாம்ப ரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரயில் (06191) அதே நாட்களில் இயக்கப்படும்.
‘ஹைடெக்’ பஞ்சாமிர்த விற்பனை நிலையம் திறப்பு
பழனி: தமிழகத்தில் உள்ள கோவிலில் வழங்கப்படும் பிர சாதத்துக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டது பழனி பஞ்சா மிர்தத்துக்கு மட்டுமே. பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக் காக ரூ.99.98 கோடியில் பெருந்திட்ட வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பழனி மேற்கு கிரிவீதியில் மின் இழுவை ரயில் (வின்ச்) நிலையம் மற்றும் அதன் எதிரில் ரூ.1.22 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ‘ஹைடெக்’ பஞ்சாமிர்தம் விற்பனை நிலையம் கட்டப் பட்டுள்ளது. இதனை, முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை (ஆக.22) காலை திறந்து வைத் தார்.
கனிம குவாரிகளில் அதிக தொகை நிர்ணயம்
மதுரை: சிவகங்கை கனிம குவாரிகளில் அரசு நிர்ண யித்ததை விட அதிகளவு பணம் பெறுவதை தடுக்கக் கோரிய வழக்கில், கனிம வளத்துறை இயக்குநர் மற்றும் சிவகங்கை ஆட்சியர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. குவாரிகளில் இருந்து தனியாருக்கு விற்க அரசு நிர்ணயம் செய்த தொகை மிகவும் குறைவு என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிக தொகைக்கு மணல், கல் விற்பனை செய்வதாகவும், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பாக வும், சில தனிநபர்களுக்கு லாபகரமாகவும் அமைந்துள்ளது. கனிம திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீதும், உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் வருகை ரத்து!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 26 அன்று திருவண்ணா மலை மற்றும் சிதம்பரம் கோவில்களில் சாமி தரி சனம் செய்ய இருப்பதாக வும், சிதம்பரம் நட ராஜர் கோவிலில் இருந்த படி மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலை யில் உரையாற்ற இருப்ப தாகவும் கூறப்பட்டிருந் தது. இந்நிலையில், தமி ழகத்திற்கு வரவிருந்த பயணம் ஒத்திவைக்கப் பட்டு அக்டோபர் முதல் வாரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரத மர் மோடி கடந்த ஜூலை மாதம் தான் தமிழகம் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பலத்த மழைக்கு வாய்ப்பு
சென்னை: மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
முகவரி இல்லாத கடிதம்
சென்னை: மதுரை யில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் அந்த கட்சியின் தலைவர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், “முகவரி இல்லாத கடிதத்திற்கு ஏன் பதில் போட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியதோடு விஜய் எனக்கு தம்பி என்றும் கூறினார்.
பதில் அளிக்க உத்தரவு
மதுரை: தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை (பேரிகேட்) அகற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள் பதில் அளிக்குமாறு உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டு, விசார ணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
காற்றழுத்த தாழ்வு
சென்னை: வங்கக் கடலில் ஆக.25 ஆம் தேதி குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி உரு வாக வாய்ப்புள்ளது. இது, அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு வடையக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரி வித்திருக்கிறது.