tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி

சேலம், செப்.11- வாழப்பாடி அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந் தார்; 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். உதகையிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட தனி யார் ஆம்னி பேருந்து, சேலம் மாவட்டம், வாழப்பா டியை அடுத்த முத்தம்பட்டி அருகே புதனன்று நள்ளி ரவு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது மேம்பாலம் அருகே திடீரென கார் குறுக்கே வந்த நிலையில், தென் காசியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜான்ராஜ் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். இதில் நிலைதடுமாறிய ஆம்னி பேருந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இவ்விபத்தில், சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் (59), கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜோதிமணி (52), உதகை கடநாடு ராதாகிருஷ்ணன் (61), பேருந்து ஓட்டு நர் ஜான்ராஜ் (40) உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பல னின்றி வியாழனன்று அதிகாலை உயிரிழந்தார். மேலும், படுகாயங்களுடன் ஓட்டுநர் ஜான்ராஜ் உள்ளிட்ட 5 பேர்  தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வி பத்து குறித்து வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வி பத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு  மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

பேரூராட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு

சேலம், செப்.11- தம்மம்பட்டி பேரூராட்சி பழைய அலுவலகத்திற்கு தீ  வைத்த நபர்களை காவல் துறையினர் தேடி வரு கின்றனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சிறப்பு நிலை பேரூ ராட்சி அலுவலகம், பேருந்து நிலையம் அருகே ஆத்தூர்  பிரதான சாலையிலுள்ள கட்டடத்தில் கடந்த 2016 ஆம்  ஆண்டுவரை இயங்கியது. இதன்பின் துறையூர் திருச்சி  செல்லும் சாலையில், எட்டடியான் கோவில் அருகே  புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு மாற்றப்பட்டு செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று இரவு  பழைய அலுவலகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த பழைய கோப்புகளை தரையில் கொட்டி தீ வைத்துச் சென்றுள்ளனர். கட்ட டத்துக்குள் இருந்து புகை வருவதைக் கண்ட அப்பகுதி யினர், பேரூராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் விரைந்து சென்ற ஊழியர்கள், தண் ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தம்ம ம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.48 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

தருமபுரி, செப்.11- அரூர் அருகே நடைபெற்ற சந்தையில், ரூ.48 லட் சத்திற்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோபி நாதம்பட்டி கூட்ரோடு, புளுதியூரில் வாரந்தோறும் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, புதனன்று நடைபெற்ற சந்தையில் தருமபுரி, கிருஷ்ண கிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப் போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்த னர். வெளி மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், கால்நடை களை வாங்க வந்தனர். சந்தையில் ஒரு மாடு ரூ.6,000 முதல் ரூ.45,000 வரையும், ஆடு ரூ.4,000 முதல் ரூ.12,000 வரையும் விற்பனையானது. மொத்தம் ரூ.48 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரி வித்தனர்.

கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு

நாமக்கல், செப்.11- ராசிபுரம் அருகே 80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பழந் தின்னிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (57). இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வரும் நிலை யில், மேய்ச்சலுக்காக அருகாமையிலுள்ள வயல்வெளி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர் பாராத விதமாக அதேபகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்திலுள்ள  சுமார் 80 அடி ஆழ கிணற்றில் ஆடு ஒன்று தவறி விழுந்தது. இதுகுறித்து சாந்தி, ராசிபுரம் தீயணைப்பு துறையின ருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 

மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி

சேலம், செப்.11- குட்டை மற்றும் திறந்தவெளி கிணற்றில் மீன் வளர்ப் பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே  உள்ள வெள்ளியம்பட்டி பகுதியில், பண்ணைக்குட்டை  மற்றும் திறந்தவெளி கிணற்றில் கூட்டுமீன் வளர்ப்பது குறித்து உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி  நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, அட்மா குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித் தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி வர வேற்றார். பண்ணைக்குட்டை மற்றும் திறந்தவெளி கிணற்றில், கூட்டு மீன்களான ரோகு, கட்லா, மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை போன்ற மீன் வகை கள் வளர்ப்பு குறித்தும், மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் பரா மரிப்பு குறித்தும், மீன் ஆய்வாளர் மனுநீதி சோழன் எடுத்துரைத்தார். மேலும், மீன் பண்ணைகள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதன் மூலம் விவ சாயிகள் வருமானம் ஈட்டலாம் என்று தெரிவித்தார். மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைப்பதின் முக்கி யத்துவம் மற்றும் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் குறித்து தோட்டக்கலை உதவி அலுவலர் வெள்ளியங்கிரி பேசினார். உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் முக்கியத்துவம், இயற்கை உரங்களை பயன்படுத்துதல் குறித்து, வட்டார தொழில் நுட்ப மேலாளர் செல்வி விளக்கமளித்தார்.

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

தருமபுரி, செப்.11- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், அருவிகளில் சுற்றுலாப் பய ணிகள் குளிப்பதற்கு புதனன்று முதல் அனு மதி அளிக்கப்பட்டது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற் றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந் துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாயன்று நிலவரப்படி விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி யாக இருந்த நிலையில், புதனன்று விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகே னக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் பத்து நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணி கள் அருவிகளில் குளிப்பதற்கு புதனன்று  முதல் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அனுமதி அளித்துள்ளார். மேலும், பிரதான அரு விக்கு செல்லும் நுழைவாயில் திறக்கப் பட்டு, சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

32 செங்கல் சூளைக்கு சீல் வைக்க உத்தரவு

தருமபுரி, செப்.11- காரிமங்கலம் வட்டத்தில் கனிம விதி களின்படி பதிவு பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மடாவட்டம், காரிமங்கலம் வட் டத்தில் 32 செங்கல் சூளைகள் உரிய அரசு பதிவு பெறாமல் இயங்கி வருவது, புவியி யல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்க ளின் புல தணிக்கையில் தெரியவந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட செங் கல் சூளை உரிமையாளர்கள் 15 தினங்க ளுக்குள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை யின் இணையதளத்தில் செங்கல் சூளைகள் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கான கெடு செப்.3 ஆம் தேதியுடன் முடிவடைந்த பின்ன ரும், 32 செங்கல் சூளை உரிமையாளர்கள் அரசு அனுமதி பெற விண்ணப்பிக்கவில்லை. இது, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதியை (1959, விதி எண்.19(2)-ஐ) மீறிய செயலா கும். எனவே, பதிவு செய்யப்படாத செங்கல் சூளைகள் இயங்குவது கனிம விதிகளின் படி  அனுமதிக்க இயலாது என்பதால், 32 செங் கல் சூளைகளை மூடி சீல் வைக்குமாறு காரிமங்கலம் வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் உத்தரவு பிறப் பித்துள்ளார்.

இன்று மின்தடை

சேலம், செப்.11- சேலம் மாவட்டம், நெத்தி மேடு துணை மின் நிலை யத்தில் வெள்ளியன்று (இன்று) மாதாந்திர பராம ரிப்புப் பணிகள் நடைபெற வுள்ளது. இதனால் நெத்தி மேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்தி ரம், அரிசிபாளையம், நான்கு  சாலை, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக் கன்பட்டி, கொண்டலாம் பட்டி, நெய்காரபட்டி, உத்தம சோழபுரம், பூலாவாரி, சூர மங்கலம், மெய்யனூர், சின் னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.