தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்த லின் போது மொத்தம் 68,000 வாக்குச்சாவாடிகள் இருந்தன. இதனையடுத்து ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய வும் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தமிழகத்தில் மேற் கொள்ளப்பட்ட வாக்குச்சாவடி பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 6,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் பட்டியல் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் தயார் நிலையில் உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடம் வாக்குச் சாவடிகளின் பட்டியலை கொடுத்து கருத்து கேட்கப்படும். இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, இந்த பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும். இதன்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 74,000 வாக்குச்சாவடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூம்புகார் மாநில விருது
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த கைவினைஞர்கள் 7 பேருக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், சிறந்த 10 கைவினைஞர் களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி, விருது கள் பெற்ற கைவினைஞர்களின் படைப்புகளை பார்வை யிட்டார்.
அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தில்லி பயணம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து போனவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அவரை கட்சி யின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து எடப்பாடி பழனி சாமி நீக்கினார். இதையடுத்து தில்லி சென்ற செங்கோட்டையன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை ஒத்தி வைத்துவிட்டு செவ்வாய்க்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அதிமுக கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றுள்ளனர். தில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரி வித்தார். இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய நபர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றிய அமைச்சருக்கு ப.சிதம்பரம் கேள்வி
சென்னை: கடந்த 8 ஆண்டுகளாக, 5 விழுக் காடு ஜிஎஸ்டி ஏன் உங்களுக்கு நியாயமாக வும் பொருத்தமாகவும் இல்லை? என ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். தற் போது 5 விழுக்காடு ஜிஎஸ்டி என்பது நியாய மான, பொருத்தமானதாக இருக்கிறது என்கிறீர்கள். கடந்த 8 ஆண்டுகளாக 12 விழுக்காடு ஜிஎஸ்டி மூலம் மக்களை, அரசு சுரண்டவில்லை என நினைக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
மல்லை சத்யா-வின் புதிய கட்சிக் கொடி அறிமுகம்
காஞ்சிபுரம்: மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறி வித்தார். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் புதிய கட்சிக் கொடியை அறி முகப்படுத்தியுள்ளார் சத்யா. இதில் மதிமுகவில் இருந்து ஏற்கனவே வில கிய முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரை சாமி, நாஞ்சில் சம்பத், ‘பொடா’ செவந்தியப்பன், ‘பொடா’ அழகுசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய வல்லம் பஷீர், “மல்லை சத்யா தொடங் கும் புதிய கட்சி அல்லது அமைப்பின் பெயர் நவம்பர் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும்” என் றார். இதில் பங்கேற்ற வர்களுக்கு வழங்கிய நினைவு சின்னத்தில் ‘திராவிட குடியரசு விடு தலைக் கழகம்’ என்ற பெயர் இருந்ததால், அதுவே கட்சிப் பெயராக இருக்கலாம் என்று தக வல் வெளியாகியுள்ளது
. இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
சென்னை: வக்பு வாரி யம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பயிலும் மற்றும் பயில உள்ள 2 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.10 ஆயிரத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பொருளாதார தடை யால் உயர்கல்வியை தொடர இயலாத இஸ்லா மிய மாணவர்கள் இளங் கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பினை தொடர ஏதுவாக 2 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங் கும் திட்டத்தை செவ்வா யன்று (செப்.16) முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத் தின் சார்பில் தொடங்கி வைத்தார்.