கனமழையால் தத்தளிக்கும் வடமாநிலங்கள் பஞ்சாப் மாநிலத்தில் நூலிழையில் உயிர் தப்பிய 400 மாணவர்கள்
ஜம்மு-காஷ்மீரில் 41 பேர் பலி ; உத்தரகண்ட், உ.பி., இமாச்சல் இயல்புநிலையை இழந்தன
வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெளுத்து வாங்கிய கன மழையால் ஜம்மு-காஷ்மீர், ராஜஸ் தான், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இயல்புநிலை இழந்து காணப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் இமயமலைச் சாரலில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 வார காலமாக விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திங்கள் இரவு முதல் புதன்கிழமை காலை வரை நீடித்த 31 மணிநேர அதீத கனமழையால் ஜம்மு, கிஷ்த்வார், தோடா, ரியாசி, ரஜோரி, ரம்பன் மற்றும் பூஞ்ச் மாவட்டங்கள் பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ளன. மேகவெடிப்பால் திரிகூட மலையின் உச்சியில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் பாதையில் (போஜ்னாலயா அருகே) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.மேலும் மாநிலம் முழுவதும் கனமழையால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. கனமழை பாதிப்புகளால் ஜம்மு மற்றும் கத்ரா நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் 58 ரயில்களை ரத்து செய்ய வடக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் இப்பகுதியில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் 64 ரயில்கள் நிறுத்தப்பட்டுள் ளன. பாலங்கள் உடைந்ததால் சாலைப்போக்கு வரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயல்புநிலை இழந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாநிலம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் இருந்து 10,000 க்கும் மேற் பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் மழையின் அளவு குறைந்ததால் ஜம்மு-காஷ்மீ ரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள அபாயம் குறைந்துள்ளது. ஜீலம் நதியில் வெள்ளம் குறையத் தொடங்குகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன. உயிர் தப்பிய 400 மாணவர்கள் இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் சட்லெஜ், ராவி மற்றும் பியாஸ் நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பக்ரா, பாங் மற்றும் ரஞ்சித் சாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக குர்தாஸ்பூர், பதான்கோட் மாவட்டங்கள் கனமழையால் உருக்குலைந்துள் ளன. சீக்கிய புனித தலமான குருவத்ரா முற்றி லும் நீரில் மூழ்கியது. குறிப்பாக குர்தாஸ்பூரில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் வெள் ளத்தில் சிக்கிக்கொண்டனர். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். இதே போல குர்தாஸ்பூர் மாவட்டத் தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மாதோபூரில் அணைக் கதவு இடிந்து விழுந்ததில் சிக்கி தவித்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்ட னர். ரஞ்சித் சாகர் அணையில் இருந்து தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பதான்கோட் பகுதியில் நிலைமை மோச மடைந்து வருகிறது. அமிர்தசரஸ் மாவட்டத்தில் ராவி நதியின் வெள்ளப்பெருக்கு காரணமாக துஸ்ஸி கரை உடைந்ததால், அஜ்னாலா பகுதியில் உள்ள பல கிராமங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்றவும், நிவாரணப் பொருட்களை அனுப்பவும் மாநில ஹெலிகாப்டரை அனுப்பு வதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்தார். அதே போல குருதாஸ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பகவந்த் மான் நேரில் பார்வை யிட்டார். இதனை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 30 வரை அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இமாச்சலில் பலி இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் அம்மாநிலத்தில் இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழு வதும் பருவமழையால் சுமார் 2,450 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் முதல் வியாழன் வரை நீடித்த கன மழையால் மீண்டும் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநி லத்தின் 12 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மொத்தம் 584 சாலைகள் மூடப்பட்டன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆப்பிள் விவசாயம் மிகவும் மோசமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த னர். இதில் 96 கால்நடைகளும் அடங்கும். சுமார் 495 வீடுகள் மற்றும் 16 மதகுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் சத்தீஸ்கர் மக்கள் இயல்பு நிலையை இழந்து தவிக்கின்றனர். உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 16 மணிநேர மாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அலகாபாத், வாரணாசி, முசாபர்நகர் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கங்கை நதியில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் வாரணாசியில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. உத்தரகண்ட் இமாச்சலப்பிரதேசம் போல உத்தரகண்ட் மாநிலமும் வெள்ளத்தால் இயல்புநிலையை இழந்துள்ளது. டேராடூன் உள்ளிட்ட சில மாவட்டங்கள் மற்றும் இமயமலை அடிவாரப் பகுதிகள் நிலச்சரிவு உள்ளிட்ட பலத்த சேதங்க ளை எதிர்கொண்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. இதே போல மத்தியப்பிரதேசம், ஜார்க் கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும் கனமழை நீடித்து வருகிறது.
தெலுங்கானா, கர்நாடகா
வடமாநிலங்களை போல தெலுங்கானா, கர்நாடகா மாநி லங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலுங்கா னாவில் உள்ள காமரெட்டி மற்றும் மேடக் மாவட்டங்கள், கடந்த 24 மணி நேரத்தில் வரலாறு காணாத அளவில் கனமழையை எதிர்கொண்டுள்ளது. இது 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த கனமழை ஆகும். கனமழையால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பகுதிகளில் 15 மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்களும், 5 தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) குழுக்களும் பணியாற்றி வரு கின்றன. இதே போல ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ள நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் கர்நாடகா மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம்ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வடக்கு கன்னட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.