நேபாளத்தில் மார்ச் 5 தேர்தல் ஜனாதிபதி அறிவிப்பு காத்மண்டு
, செப்.14- நேபாளத்தில் மார்ச் 5 அன்று பிரதிநிதிகள் சபைத் தேர்தல் (நாடாளுமன்றத் தேர்தல்) நடத்தப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ராம்சந்திர பௌடல் செப் 13 அன்று அறிவித்தார். நேபாள நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை, தேசிய சட்டமன்றம் என ஈரவை கொண்டது. பிரதிநிதிகள் சபையின் 275 உறுப்பினர் களில் 165 பேர் நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெ டுக்கப்படுகின்றனர். 110 உறு ப்பினர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படு வார்கள். ஆறு மாதங்களுக்குள் பிரதிநிதிகள் சபை தேர்தலை நடத்துவதன் மூலம், மக்கள் மிகவும் மேம்பட்ட ஜன நாயகப் பாதையில் முன் னேற வாய்ப்பு கிடைத்துள் ளது என்று ஜனாதிபதி பௌடல் தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.