அலட்சியப்படுத்தும் ஆணையாளர்; பேச மறுக்கும் ‘அவர்லேண்ட்’ நிறுவனம்
கொந்தளிப்பின் உச்சத்தில் மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்
மதுரை, ஆக. 19 - மதுரை மாநகராட்சி தூய்மைப் பணி யாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கை களை முன்வைத்து மூன்று நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணி களில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணை கள் 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தினச்சம்பளமாக ₹26,000 வழங்க வேண்டும், அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை போனஸாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன அவர்களின் முக்கிய கோரிக்கைகளாகும். மேலும், ‘அவர்லேண்ட்’ தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், தொழிற்சங்கங்களையும் தொழி லாளர்களையும் அவமதிக்கும் பழி வாங்கும் அதிகாரிகளை நீக்க வேண்டும் என்ப தோடு, சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின் பின்னணி
கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற காத்திருப்பு போராட்ட த்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், ஆகஸ்ட் 16 திங்கள்கிழமை முதல் மீண்டும் போராட்டம் தொடங்கப்பட்டது. திங்கள்கிழமை அவுட்போஸ்ட் அருகிலுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டத்தில் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க (சிஐடியு) பொதுச்செய லாளர் ம. பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கருப்ப சாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கமான எல்எல்எப் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் டிபிஐ முத்து, மாவட்ட அமைப்பாளர் எஸ். பூமிநாதன் உள்ளிட்ட சுமார் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி ஆணையா ளரிடம் நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடை பெற்றன. போராட்டம் தொடர்ந்த நிலையில், இரவு நேரத்தில் தொழிலாளர்கள் அராஜகமாக கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப் பட்டனர்.
காவல்துறை அடக்குமுறை
செவ்வாயன்று தொழிலாளர்கள் மாநக ராட்சி அலுவலகத்தில் போராட்டத்திற்கு செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர் களை தடுத்து நிறுத்தினர். மாநகராட்சி நுழைவு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தொழி லாளர்கள் “ஊழல்வாதிகள் கூட உள்ளே நுழைய முடிகிறது. ஆனால் ஊருக்கே உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளே சென்று போராட்டம் நடத்த முடிய வில்லை. இதுதான் தூய்மைப் பணியாளர் களுக்கு கிடைக்கும் மரியாதை. இப்படிப்பட்ட நிலையில் எங்களுடைய போராட்டம் மாநக ராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் காது களுக்கு எட்டுமா?” எனக் கேள்வி எழுப்பினர். மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் (சிஐடியு) ம. பாலசுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாநகராட்சி ஆணையாளர் தூண்டுதலின் பேரில் நேற்று (திங்கள்) இரவு காவல்துறை எங்க ளை கைது செய்து, நள்ளிரவில் விடுவித்தது. பொதுவாக காவல்துறை நடவடிக்கையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன என்பதை பார்க்க வேண்டும். இரவு 6 மணிக்குப் பிறகு பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லக் கூடாது. ஆனால் அதையும் மீறி கைது செய்து அடைத்துள்ளனர். போராட்டத்தை ஒடுக்கு வதற்காக எல்லா வகையிலும் காவல்துறை தயாராக உள்ளது. இதில் மாநகராட்சி ஆணை யாளர் மற்றும் நிர்வாகத்தின் அழுத்தமும் உள்ளது” என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “தொழிலாளர் களின் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்ப தற்குப் பதிலாக, காவல்துறை மற்றும் மாநக ராட்சி நிர்வாகம் அதை தீவிரப்படுத்த நினைக் கின்றன. இன்று போராட்டம் துவங்கும் போதே காவல்துறையினர் கைது செய்வதற்கு வந்த னர். ஆனால் நாங்கள் கூறியது என்னவெனில், தொழிலாளர் உதவி ஆணையாளர் சமரசம் முன்னிலையில் ஒரு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதே”என்றார்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டு, முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 7 மணி நேரமாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் காத்திருந்தனர். ஆனால் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அவர்லேண்ட் நிறுவனம் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் கூறுகையில், “மதுரை மாநகராட்சி தூய்மைப் பணி யாளர்கள் இரண்டு நாட்களாக நடத்திய காத்திருப்பு போராட்டத்தில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை. தூய்மைப் பணி யாளர்களின் போராட்டத்தை தடுக்கும் வகை யில் காவல்துறைக்கு மாநகராட்சி ஆணை யாளர் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்”என்றார். நிர்வாகத்தின் அலட்சியம் அவர் மேலும் கூறுகையில், “மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஆணையாளர் பரிசீலிக்கவில்லை. மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் காரணமாக பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. தனியார் நிறுவனம் வெளியூர் களில் இருந்து 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை வரவழைத்து தூய்மைப் பணிகளை செய்து வருகிறது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்காக காலை முதல் காத்திருந்தோம், ஆனால் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவனம் சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை” என்றார்.
போராட்டம் தொடரும்
பாலசுப்பிரமணியன் மேலும் கூறுகையில், “தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி நிர்வா கம், அவர்லேண்ட் நிறுவனம் மதிக்கவில்லை. மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் களின் போராட்டம் மூன்றாம் நாளாக புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறும். புதன் பிற்பகல் 2.30 மணிக்கு தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் தூய்மைப் பணியாளர்களை அவதூறு செய்யும் வகையில் நடந்து கொள்கிறார். 40 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறோம், எங்க ளது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவ தில்லை. தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கொச்சைப் படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை முடியும் வரை யாரும் பணி செய்யமாட்டார்கள்” என்றார். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என தொழிற்சங்க தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த போராட்டம் மதுரை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. (ந.நி.)