tamilnadu

img

அத்துமீறும் நேட்டோ - ஆர்.சிங்காரவேலு

நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization). 1949 இல் உருவாக்கப்பட்ட ஐரோப்பா மற்றும் வட அமெ ரிக்காவின் 28 நாடுகளின் அரசியல் ராணுவ கூட்டமைப்பு ஆகும். 2021 இல் உறுப்பு நாடுகள்: அல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோஷியா, செக்குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மான்டிநீக்ரோ, நெதர்லாந்து, வடக்கு மாசி டோனியா, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாகியா, ஸ்பெயின், துருக்கி, இங்கிலாந்து, அமெ ரிக்கா, ஜெர்மனி ஒரே நாடாக ஆனபோது அமெரிக்க ஜனாதி பதி ஜார்ஜ் புஷ், சோவியத் பிரதமர் மிக்கைல் கோர்ப சோவ் ஆகியோருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. நேட்டோ படைகள் கிழக்கு ஜெர்மனி, போலந்து கடந்து கிழக்காக முன்னேறாது என்பதுதான் அது. ஆனால் தற்போது நேட்டோ படைகள் உக்ரைன் வரை வந்துள்ளன. உக்ரைனும் நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளது. ரஷ்ய அமைச்சர் லவ்ரவ், நேட்டோ படைகள் உக்ரைனில் நுழையக்கூடாது; ரஷ்யாவின் பாதுகாப்பை ஐரோப்பிய யூனியனும் நேட்டோவும் உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார். இது தொடர்பாக உரசல் நீடித்து வருகிறது. ரஷ்யாவும் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் ஜெனி வாவில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. 

;