tamilnadu

தமிழக ஆளுநர் கடமையை மீறியுள்ளார் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, பிப்.5- மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மத்திய அரசின் ஒற்றர்களா கவும், ஏஜென்டுகளாகவும் செயல்படுவது தெளிவாக தெரிகிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சனிக்கிழமை (பிப்.5)  செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது: நீட் மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி  அனுப்பியது தொடர்பாக பேசிய நாராயணசாமி, “நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி  அனுப்பியது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோத மானது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மா னம் இயற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோ தாவை குடியரசுத்தலைவருக்கு அனுப் பாதது தவறு. தமிழக ஆளுநர் தன் கடமையை  மீறியுள்ளார். மசோதாவை திருப்பி அனுப்ப அதிகாரம் உள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். மாநிலங்களை பொருத்தவரை சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் விளக்கம் கேட்கலாமே தவிர, திருப்பி அனுப்பும் அதிகாரம் இல்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தப் பிறகு, எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மத்திய அரசின் ஒற்றர்களாகவும், ஏஜென்டு களாகவும் செயல்படுகிறார்கள். அது இப்போது தெளிவாக தெரிகிறது”. இவ்வாறு அவர் கூறினார்.