இந்திய மாணவர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட மாநாடு
நாகப்பட்டினம், ஜூலை 26- இந்திய மாணவர் சங்கத்தின் 28 ஆவது நாகப்பட்டினம் மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை பாப்பாகோவில் எஸ்.எம்.மஹாலில், மாவட்டத் தலைவர் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது. மாநாட்டின் முதன் நிகழ்வாக மாநாட்டு பேரணியை நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலையிலிருந்து கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி துவக்கி வைத்தார். அமைப்பின் ஸ்தாபன கொடியை மாவட்டத் தலைவர் எம்.ஜோதிபாசு ஏற்றி வைத்தார். மாநில இணைச் செயலாளர் ஜி.கே.மோகன் துவக்க உரையாற்றினார். மாநிலத் துணைத்தலைவர் பா.ஆனந்த் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிறைவுரையாற்றினார், மாவட்டச் செயலாளராக, எம். முகேஷ் கண்ணன், தலைவராக எம்.முகேஷ் ராஜன், மாவட்டத் துணைத் தலைவர்களாக சிவச்சந்திரன், தீனா, மாவட்ட துணைச் செயலாளர்களாக சதீஷ்குமார், நிகிதா ஆகியோரும், 23 பேர் கொண்ட மாவட்டக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.