நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்! முதல்வர் நேரில் அஞ்சலி
சென்னை: நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜக-வின் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன் தனது 80-ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (ஆக. 15) மாலை இல. கணேசன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித் துள்ளனர். இல. கணேசனின் உடல், மருத்துவமனையிலிருந்து தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்தி ரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தி னர். அதைத்தொடர்ந்து, இல.கணேசன் உடல் சனிக் கிழமை (ஆக.16) மாலை 5 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயா னத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
மாற்றம் எதுவும் இல்லை
திண்டிவனம்: பொதுக்குழு ரத்து செய்யப்பட்டதாக பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்; திட்டமிட்டப்படி, ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) பாமக பொதுக்குழு புதுச்சேரி அருகே தனியார் மண்டபத்தில் நடைபெறும் என்று அக்கட்சி யின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சி.வி.சண்முகத்தின் அபராத தொகை நலத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் உச்ச நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் தொடர்ந்திருந்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சி.வி. சண்முகத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த அபராதத் தொகையை தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வும், அந்த தொகையை விளிம்பு நிலையில் உள்ள மக்களுக் காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், சி.வி. சண்முகம் அபராதமாக செலுத்திய தொகை ரூ. 10 லட்சம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை வட்டாரத்தில் அதிகமாக வசிக்கும் மலை வாழ் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சுகாதார நலத் திட்டங்களுக்கும் அங்கு நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டா லின்’ திட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது.
காவல்துறை எச்சரிக்கை
சென்னை: மருத்துவப் படிப்பிற்கு இடம்பெற்றுத் தருவ தாக கூறி லட்சக்கணக்கான பணத்தை வாங்கி மோசடி செய்யும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையைப் பொறுத்த வரை, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப் பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக கலந்தாய்வு மூலம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண் தெரி வித்துள்ளார். பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பக்கூடாது என்றும் காவல்துறை ஆணையாளர் ஆ. அருண் அறிவுரை வழங்கியுள்ளார். அரசின் சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்வதன் மூலமோ கல்லூரிகளின் சேர்க்கை மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டோ மட்டுமே மருத்துவப் படிப்பிற்கான இடம் பற்றி ஆலோசனை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் உள்நோக்கம்
சென்னை: அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்தும் சோதனை குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். மேலும், “எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சியே அமலாக்கத் துறை சோதனை” எனவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
தோழர் டி.சரஸ்வதி உடல் தகனம்
சென்னை, ஆக. 16 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாநில முன்னாள் பொருளாளர் டி. சரஸ் வதி உடல் சனிக்கிழமை யன்று (ஆக.16) தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, வட சென்னை மாவட்டச் செயலாளர் எம். ராம கிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எல். சுந்தர்ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர். முரளி, வெ. தனலட்சுமி, எஸ்.வி. வேணுகோபாலன், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் கே. மகேந் திரவர்மன் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர்.
அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை, ஆக. 16 - தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டிலும் அவரது குடும்பத்தினர் இல்லங்களிலும் அமலாக்கத் துறை சனிக்கிழமை (ஆக.16) காலை முதல் சோதனை நடத்தினர். ஐ. பெரியசாமிக்குச் சொந்தமான சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வீடுகளிலும் இடங் களிலும் சோதனை நடைபெற்றது. அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, சீலப்பாடியில் உள்ள ஐ. பெரியசாமியின் மகனும், பழனி எம்எல்ஏ-வுமான செந்தில்குமார் வீட்டிலும், சிவாஜி நகரில் உள்ள அவருடைய மகள் இந்திராணியின் வீட்டிலும் தற்போது அம லாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையி லும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.