tamilnadu

img

போதைக்கு எதிராகவும் 100 நாள் வேலை உறுதிக்காகவும் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

போதைக்கு எதிராகவும் 100 நாள் வேலை உறுதிக்காகவும் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

சென்னை, அக். 14 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-ஆவது மாநில மாநாட்டு அறைகூவலின் அடிப்படையில், போதைக்கு எதிராகவும், 100 நாள் வேலை உறுதிச் சட்டத்தில் முறைகேடு களை தடுக்கவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைநகரங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். போதைப்பொருள்களும் மது பானமும் குடும்பங்களை நசுக்கும் நச்சு சக்திகளாக உள்ளன என்று  இந்த ஆர்ப்பாட்டங்களில் சுட்டிக் காட்டப்பட்டது.  பெண்களின் உழைப்பையும் இளைய தலைமுறையின் எதிர் காலத்தையும் அழிக்கும் மது, போதை பொருட்கள் சமூக சீர்கேடுகளை ஊக்குவிக்கின்றன. எனவே, பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு  மூட வேண்டும் என்றும், போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது. ஊரக வேலை உறுதிச் சட்டம்  கிராமப்புற உழைப்பாளி மக்கள், குறிப்பாக பெண்களுக்கு வாழ்வாதார மாக உள்ளது. ஆனால் பல இடங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், சம்பளம் தாமதமாவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மோடி அரசு 100 நாள் வேலைக் கான நிதி ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் குறைத்து, ஏழை மக்களின் வாழ்வா தாரத்தை நேரடியாக தாக்குவதாக விமர்சிக்கப்பட்டது. தனியார் கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகை அளிக்கும் அரசு, ஏழை மக்களை வஞ்சிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆன்லைன் பதிவு, மொபைல் ஆப்ஸ் கட்டுப்பாடு, கடுமையான விதி முறைகள் போன்ற சிக்கலான நடை முறைகளால் கிராமப்புற உழைப்பாளி களும் பெண்களும் இத்திட்டத்தி லிருந்து வெளியேற்றப்படுவதாகக் கூறப்பட்டது.  இத்திட்டத்தின் பய னாளிகளில் 55 முதல் 60 சதவிகிதம் வரை பெண்கள் என்பதால், இந்த திட்டத்திற்கான நிதி யைக் குறைப்பது, பெண்கள் விரோத போக்கு என்பது சுட்டிக்காட்டப்பட்டது. நூறுநாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என்றும், பயனாளி களுக்கு எதிரான கடுமையான விதி களை தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச் செயலாளர் அ. ராதிகா, மாநிலப் பொருளாளர் ஜி. ராணி, துணைத் தலைவர்கள் கே. பாலபாரதி, எஸ். வாலண்டினா, மத்தியக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், ஆர். சசிகலா உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகி களும் கலந்துகொண்டனர்.