அமெரிக்காவுக்கு அடிபணிகிறது மோடி அரசு
கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தருமபுரி, ஆக. 4 - மோடி அரசு வெளியுறவுக் கொள் கையில் தோல்வி அடைந்துவிட்டது, அமெரிக்காவுக்கு அடிபணிந்து செயல் படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அமெரிக்காவுடன் ‘அண்டிப் பிழைப்பு’ நடத்தும் மோடி, அந்நாட்டு அதிபருக்கு ‘காவடி தூக்குகிறார். அமெ ரிக்காவை கண்டித்து ஐ.நா. சபை யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, இந்தியா நடுநிலை வகித்தது. குறிப்பாக, காசாவில் இஸ்ரேல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த போது, மோடி கண்டிக்கவில்லை. ஐ.நா. தீர்மானத்தின்போதும் இந்தியா நடு நிலை வகித்தது. இதன்மூலம் மோடி அரசு அமெரிக்காவிற்கு அடிபணி கிறது என்பது தெளிவாகிறது. மேலும், இந்தியப் பொருட்களுக்கு 25% வரி மற்றும் அபராதம் விதிக்க அமெரிக்கா அறிவித்துள்ளது. இது குறித்து மோடி அரசு குரல் கொடுக்க வில்லை. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா எதிர்க்கிறது. அமெரிக்காவின் அடிமை யாக இந்தியா இருக்க வேண்டும் என்று டொனால்டு ட்ரம்ப் மிரட்டுகிறார். இந்த மிரட்டல்களுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மோடி அரசு தயாராக இல்லை. தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவு இந்திய தேர்தல் ஆணையம், பாஜகவின் மகளிர் அணி, இளைஞர் அணி போல செயல்படுகிறது. பீகாரில் 69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர் கள் இறந்துவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களிலும் சிறு பான்மை மற்றும் இஸ்லாமிய மக்க ளின் வாக்குரிமையைப் பறிக்கும் அரா ஜக செயலில் பாஜக ஈடுபடுகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் ஆணையம் கேட்க மறுக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி ஆகஸ்ட் 8 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி, ஆகஸ்ட் 12அம் தேதி தமிழகம் முழு வதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். தனிச் சட்டம் அவசியம் தமிழகத்தில் ஆணவக் கொலை கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் ஆணவக் கொலை களுக்கு சாதியத் திரட்டல்களே அடிப் படைக் காரணம் என்றும், பெரியார் போராடிய தமிழகத்தில் சாதிப் பெருமை பேசுவதும், தலைவர்களை சாதி ரீதி யாகக் கொண்டாடுவதும் அதிகரித்து வருகிறது. சாதி ஒழிப்புக்கு இடதுசாரி கள், பெரியாரிஸ்டுகள், அம்பேத்க ரிஸ்டுகள் அனைவரும் ஓரணியில் திரள்வோம். ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று முதலமைச் சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி வலு விழந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அக்கூட்டணியில் இல்லை என அறிவித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கைப்பற்று வோம் என்று கற்பனையில் பேசி வரு கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி படிப்படியாக சிதைந்து வருவது தமிழ கத்திற்கு நல்லது. தருமபுரிக்கு காவிரி உபரிநீர், ரயில் பாதை திட்டம் இந்த ஆண்டு அபரிதமான மழை பெய்து, காவிரியில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வீணாகக் கடலில் கலக் கிறது. எனவே, தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடி யாக செயல்படுத்த வேண்டும். இதே போன்று, பல ஆண்டுகளாக நிலுவை யில் உள்ள மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றினால், தருமபுரி மாவட்டம் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, பேட்டியின்போது, மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செய லாளர் இரா. சிசுபாலன், நகரச் செயலா ளர் ஆர். ஜோதிபாசு ஆகியோர் உடனிருந்தனர்.