tamilnadu

img

சிறைபிடிக்கப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நிதி உதவி அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்

சிறைபிடிக்கப்பட்ட படகுகளின்  உரிமையாளர்களுக்கு நிதி உதவி அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்

புதுக்கோட்டை, ஜூலை 26-  இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண நிதியுதவித் தொகைக்கான ஆணைகளை, மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மணமேல்குடியில் சனிக்கிழமை வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 15 படகுகளின்  உரிமையாளர்களுக்கு தலா ரூ.8 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.20 கோடி மதிப்பிலான நிவாரண நிதியுதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சனிக்கிழமை வழங்கினர்.  நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், கோட்டாட்சியர் ச.சிவக்குமார், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) ந.பஞ்சராஜா, மணமேல்குடி வட்டாட்சியர் இரா.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.