பெரம்பலூரிலிருந்து சென்னைக்கு அரசு ஏசி பேருந்து இயக்கம் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர், அக். 13- பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரிலிருந்து சென்னை மாதவரம் வரை செல்லும் வகையில் குளிர் சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவையின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர், புதிய பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், “பெரம்பலூர் மாவட்ட மக்களின் கோரிக்கையினை ஏற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினமும் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு மாதவரம் சென்றடையும். அங்கிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு கிளாம்பக்கம் வழியாக மாலை 7.15 மணிக்கு பெரம்பலூர் வந்துசேரும் வகையில் இந்த ஏசி பேருந்து இயக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
