tamilnadu

img

உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்

உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும்  கருத்தரங்கம் அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஆக. 24- காஞ்சிபுரத்தில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி கருத்தரங்கை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கண்காட்சியை அமைச்சர் காந்தி பார்வையிட்டு, 10 விவசாய பயனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பி லான வேளாண்மை இயந்தி ரங்கள் மற்றும் இடுப் பொருள்கள் வழங்கினார். உயிர்ம வேளாண்மை யின் அவசியம் குறித்து விவ சாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண்மை, பொறியியல் துறை, மண் பரிசோதனை முறை விளக்கம், பட்டு வளர்ச்சித்துறை, மீன்வளத்   துறை, உழவர் பயிற்சி மையம், தோட்டக்கலைத்  துறை, பாரம்பரிய அரிசி மற்றும் நெல் ரகங்கள் உள்ளிட்ட 9 துறை கள்  கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உயிர்ம வேளாண்மையின் அவசியம் மற்றும் முக்கி யத்துவம் குறித்து. விவ சாயிகளிடம் கலந்துரை யாடினர்.  இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர்  கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் சிறுவேடல் க.செல்வம். காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழி லரசன், மாவட்ட வரு வாய் அலுவலர் வெங்க டேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் நித்தியா சுகுமார், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.