tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமைச்சர், நியமன எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு

புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என். ஆர்.காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் உட்பட 4 அமைச் சர்களும், பாஜக தரப்பில் நமச்சிவாயம், சாய் சரவணகுமார் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர், அமைச்சர் பதவி  கேட்டு குடைச்சல் கொடுத்து வந்தனர். ஆட்சி நிறைவு பெற வுள்ள சூழலில் ஒன்றிய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட  3 எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக அமைச்சர் சாய் சரவண குமார் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். சுமார் 2  வார கால இழுபறிக்கு பிறகு, புதிய அமைச்சராக ஜான்குமார்,  நியமன எம்எல்ஏக்களாக தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர், செல்வம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் திங்களன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புறக்கணித்தனர்.

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

சென்னை: சென்னை தமிழ்நாடு முழுவதும் ‘முதல்வர் மருந்தகம்’ நடத்தி வரும் தனிநபர் தொழில் முனைவோர் கூட்ட மைப்பினர், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அலுவலகங்களிலும் கோரிக்கை மனு அளித்தனர். ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகத்தில் 2 ஆயிரத்துக் கும் அதிகமான மருந்துகள் கிடைப்பதைப் போல, முதல்வர்  மருந்தகங்களிலும் அதிக மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்தகம் நடத்தும் தொழில் முனை வோர்களுக்கு லாப சதவீதத்தை அதிகப்படுத்தி வழங்கவும், மருந்தாளுநர் சம்பளம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வீதம் 2 ஆண்டு களுக்கு வழங்க வேண்டும். விற்பனையாகாத மருந்துகளை  திரும்பப் பெற்றுக் கொள்ளவும், மாவட்ட மருந்துக் கிடங்கில்  இல்லாத மருந்துகளை வெளியில் கொள்முதல் செய்து அனு மதி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிடிவாரண்ட் நிலுவை விவரம்  தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகளின் எண்ணிக்கை குறித்து ஜூலை 23 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை  உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவ ருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்தக்  கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவை  விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல்துறையினர் இதுவரை செயல்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுபோல பல வழக்கு களில் பிடிவாரண்டுகள் செயல்படுத்தப்படாமல் நிலுவையில்  உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் பிடிவாரண்டுகளை நிலுவையில் வைத்திருப் பதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என்றும்  நீதிபதி தெரிவித்துள்ளார்.

8 சிறிய துறைமுகங்கள்

சென்னை: தமிழ கத்தில் முகையூர், பனை யூர், மரக்காணம், சிலம்பி மங்கலம், வானகிரி, விழுந்தமாவடி, மணப் பாட்டில் துறைமுகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த துறைமுகங்களை உருவாக்க தனியார் முத லீட்டாளர்களுக்கு தமிழ் நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சுற்றுப்பயணம் அறிவிப்பு

சென்னை: 2026  சட்டமன்றத் தேர்தலை யொட்டி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் ஆக.3  முதல் தமிழகம் முழு வதும் முதற்கட்டமாக திருவள்ளூர், காஞ்சி புரம், ராணிப்பேட்டை, சேலம், வேலூர் உள் ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார்.

காவல் ஆணையர் மீது நடவடிக்கை

சென்னை: சமூக வலைதளங்களில் தன்னை மார்பிங் செய்து ஆபாசமாக படங்களை வெளியிட்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கக்  கோரி பெண் ஒருவர் புகார் அளித்தும், சென்னை கோயம்பேடு  காவல் துணை ஆணை யர் அதிவீரபாண்டியன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை யடுத்து, அந்த பெண் அளித்த புகாரின்பேரில், காவல் துணை ஆணை யருக்கு விடுப்பு அளித்து  சென்னை காவல் ஆணையர் அருண் நட வடிக்கை எடுத்துள்ளார்.

வனிதா பதிலளிக்க உத்தரவு

சென்னை: இசைய மைப்பாளர் இளைய ராஜா தொடர்ந்த வழக்கில்  நடிகை வனிதா விஜய குமார் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. நடிகை வனிதா விஜய குமார் இயக்கி நடித்த மிஸஸ் & மிஸ்டர் திரைப் படம் கடந்த வாரம் வெளி யானது. இந்தப் படத்தில்  மைக்கேல் மதன காம ராஜன் படத்தில், தான் இசையமைத்திருந்த ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா குற்றச் சாட்டு முன்வைத்து உள்ளார். இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, வனிதா விஜயகுமார் தரப்பு, ஒரு வார காலத் தில் பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.