tamilnadu

img

நடப்பாண்டில் 6 ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

நடப்பாண்டில் 6 ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

சேலம், செப்.2- மேட்டூர் அணையானது நடப் பாண்டில் 6 ஆவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி யுள்ளது. தென்மேற்குப் பருவமழை கார ணமாக கர்நாடகா மாநிலத்திலுள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீா் காவிரி யில் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்து கடந்த ஜூன் 29ஆம் தேதி  நடப்பாண்டில் முதல் முறையாக வும், ஜூலை 5ஆம் தேதி 2 ஆவது முறையாகவும், ஜூலை 20 ஆம் தேதி 3 ஆவது முறையாகவும், 25  ஆம் தேதி 4 ஆவது முறையாகவும், ஆக.20 ஆம் தேதி 5 ஆவது முறையா கவும் அணை நிரம்பியது. அதன் பிறகு மழை குறைந்ததாலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்ட தாலும் அணையின் நீா்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது. இந்நிலையில், மீண்டும் காவிரி யின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கர்நா டக அணைகளிலிருந்து அதிகள வில் உபரிநீர் காவிரியில் திறக்கப் பட்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மெல்ல உயரத் தொடங்கி, செவ்வாயன்று நடப்பாண்டில் 6 ஆவது முறை யாக அணை நிரம்பியது. இதைய டுத்து அணையின் இடதுகரையில் உள்ள 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவ தால், தாழ்வான பகுதிகளில் வசிக் கும் மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்ல வேண்டும். வெள்ளப் பெருக்கில் குளிக்க, துணி துவைக் கக்கூடாது. சுயப்படம் எடுப்பதை யும், கால்நடைகளை ஆற்றில்  இறக்குவதையும் தவிர்க்க வேண் டும் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது. மேலும், செவ்வாயன்று நில வரப்படி அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரத்து 800 கனஅடியாகவும், நீர்திறப்பு 33 ஆயிரத்து 800 கன அடியாகவும் உள்ளது. 315 ஆவது நாளாக அணையின் நீர்மட்டம் 100  அடிக்கும் கீழே குறையாமல் உள் ளது குறிப்பிடத்தக்கது.