tamilnadu

img

மயிலாடுதுறை இளைஞர் சாதி ஆணவப் படுகொலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை இளைஞர் சாதி ஆணவப் படுகொலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 18 - மயிலாடுதுறையில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்க இளைஞர் சாதி ஆண வப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், சாதி ஆணவப் படுகொ லைகளை தடுத்து நிறுத்த சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை  வலியுறுத்தியும் திருப்பூரில் தீண்டாமை  ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தி யது. மயிலாடுதுறையில் 10 ஆண்டுக ளாக காதலித்து வந்த பெண்ணை திரும ணம் செய்யக் கூடாது என அவரது தாய்  உள்ளிட்ட உறவினர்கள் வாலிபர் சங்க  நிர்வாகி வைரமுத்துவை தாக்கி, படு கொலை செய்தனர். இந்த சம்பவத் தைக் கண்டித்தும், தமிழக அரசு சாதி  ஆணவப் படுகொலைகளை தடுக்க  சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வலியு றுத்தியும் வியாழனன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பா. ஞானசேகரன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆதித்த மிழர் ஜனநாயகப் பேரவை நிறுவனர் அ. சு.பவுத்தன், அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்க நிர்வாகி பி.செல்வி, வாலிபர்  சங்க மாவட்டத் தலைவர் க.நிருபன் சக்க ரவர்த்தி, சிஐடியு நிர்வாகி ஒய். அன்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.பரமசி வம் ஆகியோர் கோரிக்கையை வலியு றுத்தி கண்டன உரையாற்றினர். இதில்  மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களைச் சேர்ந்தோர் திரளா னோர் கலந்து கொண்டு கண்டன முழங் கங்கள் எழுப்பினர்.