tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பின் மயிலாடுதுறை கோட்ட பேரவை

மின் ஊழியர் மத்திய அமைப்பின்  மயிலாடுதுறை கோட்ட பேரவை

மயிலாடுதுறை, ஜூலை 21-  மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்ட பேரவை கூட்டம், மாவட்ட திட்ட இணைச் செயலாளர் ஜி. இளவரசன் தலைமையில் நடைபெற்றது.  கோட்ட நிர்வாகி இ. தேவக்குமார் வரவேற்றுப் பேசினார். அஞ்சலி தீர்மானத்தை கோட்ட நிர்வாகி ரமேஷ் முன்மொழிந்தார். பேரவையை துவக்கி வைத்து சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் குணசேகர் பேசினார். கோட்டச் செயலாளர்  மணிமேகலன் வேலையறிக்கையை முன்வைத்தார். பேரவையை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் தி.பரிமளா பேசினர்.  திட்டச் செயலாளர் எம். கலைச்செல்வன் உரையாற்றினார். பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டபட்டனர். கோட்ட தலைவராக எம். மணிமேகலன், செயலாளராக என். அமுல்ராஜ் உள்ளிட்ட 15 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.