tamilnadu

img

மாதர் சங்க மாநில மாநாட்டு வரலாற்றுக் கண்காட்சி

மாதர் சங்க மாநில மாநாட்டு வரலாற்றுக் கண்காட்சி 

மார்த்தாண்டத்தில் உ. வாசுகி  திறந்து வைத்தார்

குழித்துறை, செப். 23 - மாதர் சங்க மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக, வரலாற்றுக் கண்காட்சியை சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி மார்த்தாண்டத்தில் திறந்து வைத்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-ஆவது  மாநில மாநாடு குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் புதன்கிழமை யன்று (செப்.24) துவங்கி செப்டம்பர் 27 வரை நடைபெறுகிறது. முதல் நாளில், குழித்துறையில் பல்லா யிரக்கணக்கான பெண்கள் அணி வகுக்கும் பேரணியும், கேரள முதல்வர் பினராயி விஜயன் உரை யாற்றும் பொதுக்கூட்டமும் நடை பெற உள்ளது. பிரதிநிதிகள் மாநாடு மார்த்தா ண்டம் கே.கே.எம். திருமண மண்ட பத்தில் வியாழனன்று துவங்குகிறது. மாநில துணைத்தலைவர் ஆர். மல்லிகா கொடி ஏற்றுகிறார். அகில இந்தியத் தலைவர் பி.கே. ஸ்ரீமதி, மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். இந்நிலையில், தமிழக பெண்கள் இயக்கம் மற்றும் அதன் போராட்ட வரலாறுகளைச் சொல்லும் சிறப் பான கண்காட்சி மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் அமைக் கப்பட்டுள்ளது. இந்த புகைப்படக் கண்காட்சியை செப்டம்பர் 23  அன்று சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி திறந்து  வைத்தார்.  அகில இந்திய துணைச் செயலாளர் பி. சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா, பொருளாளர் ஜி. பிரமிளா மற்றும் எஸ்.கே. பொன்னுத்தாய்,  ஆர். சசிகலா, உஷாபாசி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.