tamilnadu

img

சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சாலை மறியல்

சாலைகளை செப்பனிடக்கோரி  மார்க்சிஸ்ட் கட்சி சாலை மறியல்

மயிலாடுதுறை, ஜூலை 17-  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், பெரம்பூரில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ள தார் சாலையை செப்பனிடக்கோரி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் வியாழனன்று, கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த் தலைமையில் நடைப்பெற்றது.  பெரம்பூரிலிருந்து, சேத்தூர் வழியாக உக்கடை செல்லும் சாலை, அதே போன்று பெரம்பூர் முதல், பாலூர் செல்லும் சாலையும் மிக மோசமாக சேதமடைந்து  குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் வாயிலாகவும், நேரிலும் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர் பெரம்பூரில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.வைரவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை பொறுப்பாளர்கள், கிராம பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மறியலில் ஈடுப்பட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சாலைப் பணிகளை குறிப்பிட்ட நாட்களில் துவங்க உள்ளதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.