தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு), ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், இந்திய தொழிற்சங்க மையத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவருமான எம்.கே.என்.அனிபா இல்ல திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் திருமண விழாவிற்கு தலைமை ஏற்று மணமக்கள் எம்.சதக்கத்துல்லா-எம்.ரிஃபாயத் ஆகியோர் திருமணத்தை நடத்தி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது மணமக்கள் இருவரும் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். விழாவில் சிபிஎம் கீவளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு ஜி.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாநில நிர்வாகிகள் வி.குமார், எம்.சிவாஜி, ஆர்.புவனேஸ்வரன், திண்டுக்கல் ஆர்.பாண்டியன் மற்றும் திருவாரூர் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.