மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா!
மதுரை, அக். 15 - மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி பொன்வசந்த், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மதுரை மாநகராட்சியில், 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ. 150 கோடிக்கு மேல் வரி வசூலில் முறைகேடு நடந்திருப்ப தாக எழுந்த குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை மாதம் மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர் களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். அவர் களும் ராஜினாமா செய்தனர். இந்நிலையிலேயே தற்போது மேயர் இந்திராணி பொன்வசந்தும் தமது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது மாநக ராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்கள் நிறு வனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவ மனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக நடத்திய ஆய்வில், 2022-2023- ஆம் ஆண்டுகளில் ரூ. 150 கோடிக்கு மேல் வரி வசூலில் முறைகேடு செய்யப்பட்டு மாநகராட் சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. வரி வசூல் அதிகாரிகளின் பாஸ்வேர்டு களை முறைகேடாக பயன்படுத்தி வரிக் குறைப்பு செய்தது ஆய்வில் தெரியவந்த நிலை யில் இதுகுறித்து சைபர் கிரைம் காவல் துறை யினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இப்பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு, திமுக மண்டலத் தலைவர் களான வாசுகி (கிழக்கு), சரவண புவனேஷ்வரி (வடக்கு), பாண்டிச்செல்வி (மத்தி), முகேஷ் சர்மா (தெற்கு) மற்றும் சுவிதா (மேற்கு), நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகி யோரை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். அவர்களும் கடந்த ஜூலை 9 அன்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். வரி முறைகேடு குற்றச்சாட்டில், முதல் குற்ற வாளியாக மாநகராட்சி மேயர் இந்திராணி யின் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி வரி விதிப்புக் குழுத் தலைவரான விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், மாநகராட்சி உதவி ஆணை யர் சுரேஷ்குமார், உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, முதலமைச்சர் முடிவு எடுப்பார் என பதிலளித்திருந்தார். இந்நிலையிலேயே மேயர் இந்திராணி, தனது குடும்பச் சூழல் காரணமாக மேயர் பதவி யில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜய னிடம் புதனன்று (அக். 15) ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் இதையடுத்து மேயர் இந்திராணி வழங்கிய ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக, துணை மேயர் தி. நாகராஜன் தலைமையில் வெள்ளிக் கிழமை (அக்.17) அன்று மாநகராட்சியின் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
