tamilnadu

பேச்சுவார்த்தை தோல்வி  தொடரும் எல்பிஜி டேங்கர்  லாரிகள் வேலை நிறுத்தம்

பேச்சுவார்த்தை தோல்வி  தொடரும் எல்பிஜி டேங்கர்  லாரிகள் வேலை நிறுத்தம்

சென்னை: சமையல் எல்பிஜி டேங்கர் லாரிகளின் 2025- 2030 ஆம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் 3,500 எல்பிஜி டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில்  அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2,800 டேங்கர் லாரிகளுக்கு  மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.  மீதமுள்ள லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதி யான அனைத்து எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கக் கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர் கடந்த அக்.9 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு எல்பிஜி அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆயில் நிறுவன அதிகாரிகள் காணொலி மூலமாக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த  பேச்சுவார்த்தையில் 3 ஆயில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் கூறுகை யில், “எங்களது கோரிக்கைகளை ஆயில் நிறுவன அதிகாரிகள்  நிறைவேற்றவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எங்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. அக்.13 அன்றும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் உடன்பாடு எட்டப்பட்டால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும்” என்றார்.