tamilnadu

img

பட்டியல் - பழங்குடி, சிறுபான்மையினரின் வாக்குகளை நீக்க சதி! தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்!

பட்டியல் - பழங்குடி, சிறுபான்மையினரின் வாக்குகளை நீக்க சதி!

தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்!

திருவனந்தபுரம், செப். 29 - தவறான நோக்கத்துடன் அவசர கதியில் மேற்கொள்ளப்படும் தீவிர  வாக்காளர் பட்டியல் திருத்த நட வடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என்று கேரள சட்டப்பேரவை ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், தேர்தல் ஆணையத்தின் நேர்மை சந்தேகத்திற்கு உரியதாக மாறியிருப்பதாக தெரித்தார். தீர்மானத்தை முன்மொழிந்து முத லமைச்சர் மேலும் பேசியதாவது:  குடிமக்கள் பதிவேட்டிற்கான தந்திரமான முன்னோட்டம் “வாக்காளர் பட்டியலை சிறப்பு  மற்றும் தீவிர மறு ஆய்வுக்கு உட்படுத்தும் மத்திய தேர்தல்  ஆணையத்தின் நடவடிக்கை யானது, ‘தேசிய குடிமக்கள் பதி வேட்டின் (National Register of Citizens - NRC)’- ‘ஒரு தந்திரமான செயல்படுத்தல்’ என்று பரவலான கவலை உள்ளது. பீகாரில் நடந்த எஸ்ஐஆர் (Special Intensive Revision - SIR) செயல்முறை அத்த கைய கவலைகளை உறுதிப்படுத்து கிறது. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், விலக்கல் அரசியலாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சக்கணக்கானோர் நியாயமற்ற முறையில் நீக்கம் செய்யப்பட்டனர். இதே நடைமுறையை நாடு தழு விய அளவில் மேற்கொள்ள திட்ட மிட்டிருக்கிறார்களோ என்ற சந்தேக மும் நாடு முழுவதும் உள்ளது. பீகார் செயல்முறையை கேரளத்தில் ஏற்க முடியாது! பீகார் மாநிலத்தின் எஸ்ஐஆர் (SIR) செயல்முறையின் அரசிய லமைப்புச் சட்ட செல்லுபடித் தன்மை, உச்சநீதிமன்றத்தின் பரிசீல னையில் உள்ளது. இருப்பினும், தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள கேரளம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில்- பீகார் மாதிரி செயல்முறையை அமல்படுத்த முனைவதை சாதாரணமாகக் கருத முடியாது. நீண்டகாலத் தயாரிப்பு மற்றும் ஆலோசனை தேவைப் படும் எஸ்ஐஆர் போன்ற தீவிர செயல்முறை இவ்வளவு அவ சரமாக மேற்கொள்ளப்படுவ தானது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது மற்றும் அவர்களின் விருப்பத்தை சீர்குலைப்பதாகும். கேரளத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. அதன் பிறகு உடனடியாக சட்ட மன்றத் தேர்தல்கள் நடத்தப்படு கின்றன. இந்த சூழ்நிலையில், அவ சரமாக எஸ்ஐஆர் நடத்துவது தவ றான நோக்கம் கொண்டதாகும். இதற்கு முன், 2002 ஆம் ஆண்டு கேரளத்தில் வாக்காளர் பட்டிய லில் முழுமையான திருத்தம் செய்யப்பட்டது. 2002-ஆம் ஆண் டின் அடிப்படையில் திருத்தம் செய்யப்படுவதும் அறிவியல் பூர்வமானது அல்ல. பெற்றோரின் ஆவணங்களை இப்போது கேட்பது ஏன்? 1987-க்குப் பிறகு பிறந்தவர் கள் தங்கள் தந்தை அல்லது  தாயின் குடியுரிமை ஆவணங்களை யும் சமர்ப்பித்தால் மட்டுமே வாக்க ளிக்க முடியும் என்று எஸ்ஐஆர் குறிப்பிடுவது, வயது வந்தவராக - ஒருவரின் வாக்களிக்கும் உரிமை யை மீறும் ஒரு முடிவாகும். 2003-க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்கள் தந்தை மற்றும் தாயின் குடியுரிமை ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றும் விதிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் இல்லாததால், சம்பந்தப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்குவது அரசியலமைப்பின் 326-ஆவது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தர வாதம் அளிக்கப்பட்ட வாக்க ளிக்கும் உரிமையை முழுமையாக மீறுவதாகும். எஸ்ஐஆர்-இல் உள்ள இத்த கைய விதிகள் மூலம், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்கும்

உரிமையிலிருந்து விலக்கப்படுகிறார்கள் என்பதை இந்தத் துறையைச் சேர்ந்த நிபுணர்களின் ஆய்வுகள் காட்டுகின்றன. பட்டியல் - பழங்குடி வகுப்பு சிறுபான்மையினருக்கு குறி! இவர்களில் பெரும்பாலோர் சிறு பான்மைச் சமூகங்கள், பட்டியல் சாதி கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர், பெண்கள் மற்றும் ஏழைக் குடும்பங் களைச் சேர்ந்தவர்கள். வாக்காளர் பட்டி யலில் உள்ள ஊரில் வசிக்காத வாக்கா ளர்களின் வாக்களிக்கும் உரிமைகள் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். மதத்தின் அடிப்படையில் குடியுரி மையை உருவாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தூசுதட்ட முயற்சிப்பவர்கள், தற்போது எஸ்ஐஆர்-ஐயும் பயன்படுத்துவ தானது, இந்திய ஜனநாயகம் எதிர் கொள்ளும் ஒரு சவாலாக மாறியுள்ளது. எனவே, அடிப்படை உரிமைகளை மீறும் இத்தகைய நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் தவிர்த்து, வாக்காளர் பட்டி யலை வெளிப்படையாகப் புதுப்பிக்க வேண்டும்.” இவ்வாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.