ஆதிவாசி மக்களின் மொழி கலாச்சாரத்தை அழிக்கத் துடிக்கும் இந்துத்துவா சக்திகளை முறியடிப்போம்!
அகில இந்திய தலைவர் ஜிதேந்திர சவுத்ரி உரை பழனி, அக்.7 - ஆதிவாசி மக்களின் மொழி கலாச்சாரத்தை அழிக்கத் துடிக்கும் இந்துத்துவா சக்திகளை முறியடிப்போம் என்று ஆதிவாசி உரிமைகளுக் கான தேசிய மேடை அமைப்பின் அகில இந்திய தலைவர் ஜிதேந்திர சவுத்ரி வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 10 ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. இதைத் துவக்கி வைத்துப் பேசிய ஜிதேந்திர சவுத்ரி, “மலைவாழ் மக்களின் போராட்டமும், ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்த செங்கொடி இயக்கத்தின் தொடர்ச்சி யான உறுதிமிக்க முன்னெடுப்பும் பாராட்டத் தக்கது” என்றார். வன உரிமைச் சட்டத்தின் மீதான தாக்குதல் கடந்த 72 ஆண்டுகளாக தலித், மத சிறு பான்மை, பழங்குடி மக்கள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 2014 முதல் ஒன்றிய பாஜக அரசு வன உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆதிவாசிகளின் அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆட்சியில் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவை கடும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளன. இந்துத்துவா சித்தாந்தத்தையும் இந்து ராஷ்டிரத்தையும் திணிக்க அனைத்து வழிகளி லும் முயற்சி நடக்கிறது என்றார் அவர். லடாக்கில் வீரமிக்க போராட்டம் மேலும் அவர் பேசியதாவது: ஆதிவாசி மக்கள் உரிமைகளுக்கான தேசிய மேடை திரிபுரா உள்பட 15 மாநிலங்களில் செயல் படுகிறது. தமிழ்நாட்டில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டம் நாடு முழுவதும் உள்ள ஆதிவாசிகளுக்கு புதிய உற்சாகம் அளிக்கிறது. ஜம்மு-காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்ட லடாக்கில், 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் நீக்கப் பட்டன. அரசியலமைப்பின் 6 ஆவது சட்டப்பிரிவு இணைப்பு, மாநில அந்தஸ்து, 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள மலைவாழ் மக்கள் கவுன்சில் தேர்தல் நடத்த வேண்டும் என லடாக் மக்கள் வீரமாகப் போராடி வருகின்றனர். இந்த போராட் டத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நசுக்க முயல்கின்றனர். ஆதிவாசி நிலங்கள் அதானி வசம் சத்தீஸ்கர் போன்ற சிறிய மாநிலங்கள், ஆதி வாசிகளின் மொழி கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்று சொல்லி உருவாக்கப்பட்டன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ஆதிவாசி நிலங்கள் பறிக்கப்பட்டு அதானி, அம்பானி வசம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளன. நக்சலைட், மாவோயிஸ் ட்டுகளை ஒடுக்குவதாகக் கூறி ஆதிவாசி மக்கள் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். திரிபுரா சிபிஎம் அரசின் சாதனை திரிபுராவில் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியின்போது, ஆதிவாசிகள் தங்கள் உரிமைகளுடன் அமைதியாக வாழ்ந்த னர். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆதி வாசிகள் இருந்தாலும், மூன்றில் இரண்டு பங்கு நிலம் அவர்களிடம் இருந்தது. மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் வழங்க வேண்டிய வேலையை 90 நாட்கள் வரை வழங்கி யது சிபிஎம் அரசு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வாறு நடைமுறைப் படுத்த வில்லை. இடது முன்னணி ஆட்சியின் போது திரிபுரா மக்கள் வேலைவாய்ப்புக்காகவோ, பஞ்சம் பிழைக்கவோ வேறு மாநிலங்களுக்கு இடம்பெய ரவில்லை. இதுதான் திரிபுரா சிபிஎம் அரசின் சாதனை. வன உரிமைச் சட்டத்தை 100 சதவீதம் நடைமுறைப்படுத்திய ஒரே மாநிலம் திரிபுரா என்பது குறிப்பிடத்தக்கது. 2018இல் அடையாள அரசியல் என்ற பெய ரில், பல்வேறு சதிகளைச் செய்து ஆட்சிக்கு வந்த பாஜக, அதுவரை ஆதிவாசிகள் அனுபவித்த உரி மைகளைப் பறித்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார். ஜனநாயக சக்திகளுடன் இணைவோம் நிறைவாக, “இந்திய அளவில் ஆதிவாசி மக்கள் தொகை 9 சதவீதம் மட்டுமே. இவர் களைப் பாதுகாக்க நமது மொழி, கலாச்சாரம், பண்பாடு காக்கப்பட வேண்டும். மற்ற ஜனநா யக இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து போராடி னால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த மக்க ளைப் பாதுகாக்கவும் முடியும். இந்த மாநாட்டில் கலந்தாலோசித்து எதிர்கால பணிகளைத் திட்ட மிட வேண்டும்” என்று ஜிதேந்திர சவுத்ரி வேண்டு கோள் விடுத்தார். (ந.நி)