tamilnadu

img

பழம்பெரும் திரைக்கலைஞர் சரோஜா தேவி காலமானார்!

பழம்பெரும் திரைக்கலைஞர் சரோஜா தேவி காலமானார்!

சென்னை, ஜூலை 14 - தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் திரைக்கலைஞரும், தமிழ்த் திரையுலக ரசிகர்களின் அபிமானத்தை பெற்றவருமான சரோஜா தேவி   பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் கால மானார். அவருக்கு வயது 87.  ரசிகர்களால், ‘அபிநய சரஸ் வதி’, ‘கன்னடத்துப் பைங்கிளி’ என்று அழைக்கப்பட்ட   சரோஜா  தேவியின் மறைவு, தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட சரோஜா தேவி, 1955- ஆம் ஆண்டு ‘மகாகவி காளி தாசா’ என்ற கன்னட திரைப்படத் தின் மூலம் சினிமாவில் அறிமுக மானவர் ஆவார். முதல் படத்தி லேயே பலரின் பாராட்டுகளைப் பெற்ற அவர், தமிழில் சிவாஜி கணே சனின் ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடித்து, தமிழ்ச் சினிமா வுக்கு பரிச்சயமானார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் இவர்  நடித்திருந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் வெற்றி, தமிழ் மக்களுக்கு இன்னும் இவரை நெருக்கமாக்கியது. எம்.ஜி.ஆர்,  சிவாஜி கணேசன், ஜெமினி கணே சன் போன்ற தமிழ் சினிமாவின் ஆளு மைகள் பலருடனும் சரோஜா தேவி இணைந்து நடித்து புகழ்பெற்றார்.  பாலும் பழமும், ஆலயமணி, அரச கட்டளை, கல்யாணப் பரிசு,  பாகப்பிரிவினை, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன்,  குடும்பத் தலைவன், ஆடிப் பெருக்கு போன்ற படங்கள் சரோஜா தேவியின் நடிப்புத் திறமைக்கு சான்றாக அமைந்தன.  ரசிகர்களால், அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என்று அழைக்கப்பட்ட சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என கிட்டத்தட்ட 30 வருடங்களில், 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த ஒரே நடிகை ஆவார். ஒன்றிய அரசு, 1969-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1992-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் வழங்கி சரோஜா தேவியை கவுரவித்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதையும் சரோஜா தேவி பெற்றுள்ளார். தமிழில் கடைசியாக கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா - நயன்தாரா நடித்திருந்த ‘ஆதவன்’ படத்தில் சரோஜா தேவி நடித்திருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள இல்லத்தில் திங்களன்று (ஜூலை 14) காலை கால மானார். கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சரோஜா தேவியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலை வர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள னர்.

முதல்வர் இரங்கல்

“தமது அழகிய முகபாவங் களும் நளினமான நடிப்பாலும் ‘அபி நய சரஸ்வதி’ எனப் புகழப்பட்ட சரோஜா தேவி அவர்களின் மறைவு  எளிதில் ஈடு செய்ய முடியாதது.  சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலை மாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது இரங்கல் செய்தி யில் குறிப்பிட்டுள்ளார். ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.