states

img

கமல்ஹாசன் எம்.பி-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன்!

கேரளத்தில் சிபிஎம் ஆட்சி தொடர வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன் எம்.பி-க்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்ததோடு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து முற்போக்கு உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்போம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில், "தோழர் பினராயி விஜயன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்! வரவிருக்கும் தேர்தலில் மாநிலத்தின் பயனாளிகள் (என்னையும் உள்ளடக்கி) கடந்த பத்தாண்டுகளைச் சிந்தித்துப் பார்த்து நாம் சரியான முடிவை எடுப்போம். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழர் விஜயன் வெற்றி பெறட்டும்! கேரளமும் வெற்றி பெறும்!" என்று தெரிவித்திருந்தார். 
இதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன்,
"உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி. நீங்கள் இங்கு ஒருபோதும் வெளியாள் அல்ல. கேரளம் எங்களுக்கு எவ்வளவு சொந்தமோ, அதே அளவு உங்களுக்கும் சொந்தமானதுதான். மதச்சார்பின்மையும் சகோதரத்துவமும் தழைத்தோங்கும் நமது மண்ணில், எவரும் வெளியாள் அல்ல.
மக்களின் நலன் மற்றும் உண்மையான வளர்ச்சியை மட்டுமே உறுதியான குறிக்கோளாகக் கொண்டு நாம் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அந்த முற்போக்கு உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்போம். கேரளம் நிச்சயமாக வெற்றி பெறும்!" என்று தெரிவித்துள்ளார்.