tamilnadu

img

கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளுடன் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளுடன்  இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு 

பாஜக அரசு பொய் வழக்கு : ரத்து செய்ய வலியுறுத்தல்

ராய்ப்பூர், ஜூலை 30 - சத்தீஸ்கரில் பொய்யான மத மாற்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள கன்னியாஸ்திரிகள் மற்றும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த சுக்மாய் மாண்டவி உள்ளிட்டோரை, பல்வேறு தடைகளுக்குப் பிறகு, சிபிஎம், சிபிஐ  மற்றும் கேரள காங்கிரஸ் (எம்) தலை வர்கள் அடங்கிய குழு சந்தித்தது.  துர்க் சிறையில் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, சிபிஎம் மூத்த தலை வர் பிருந்தா காரத், சிபிஐ தலைவர் ஆனி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. ராதாகிருஷ்ணன், ஏ.ஏ. ரஹீம், பி.பி. சுனீர், கேரள காங்கிரஸின் ஜோஸ் கே. மணி ஆகிய இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.  அப்போது, கன்னியாஸ்திரிகள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை உடனடியாக ரத்து  செய்வதுடன், பொய்யான குற்றச்சாட்டை பரப்பி இதற்கு காரண மான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். “முற்றிலும் அப்பாவி கன்னி யாஸ்திரிகள் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் உள்ள கன்னி யாஸ்திரிகள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இது வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட வழக்கு. பாஜக அரசு கிறிஸ்தவர்களை குறி வைக்கிறது. கன்னியாஸ்திரிகள் இந்திய  குடிமக்கள் அல்ல என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக ரத்து செய்து, குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிருந்தா காரத் கூறினார்.