tamilnadu

img

கும்பகோணம் ஓய்வூதியர் சங்க மாநாடு

கும்பகோணம்  ஓய்வூதியர் சங்க மாநாடு

கும்பகோணம், ஜூலை 3-  தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கும்பகோணம் வட்ட 5 ஆவது மாநாடு கும்பகோணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு வட்டத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். முன்னதாக, சங்கக் கொடியை கும்பகோணம் அரசு கவின் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் வித்தியாசங்கர் ஸ்தபதி ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கண்ணன் நன்றி தெரிவித்தார். மாநாட்டில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக தமிழக அரசு  அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் கும்பகோணம் வட்ட தலைவராக துரைராஜ், துணைத் தலைவர்களாக தனசெல்வி, சேகர், தங்க வளவப்பன், செயலாளராக கே. பக்கிரிசாமி, துணைச் செயலாளர்களாக சாரங்கன், கண்ணன், மல்லிகா, பொருளாளராக ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஜி கண்ணன், தணிக்கையாளர்கள் சண்முகம், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.