tamilnadu

காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: பெற்றோர் உட்பட 6 பேர் கைது

காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: பெற்றோர் உட்பட 6 பேர் கைது

நாமக்கல், ஆக.21- காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்திச் சென்றதாக பெற்றோர் உட்பட  6 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். நாமக்கல் மாவட்டம், கொக்கராயன் பேட்டையைச் சேர்ந்த விஜய் (22) என்பவ ரும், தேவனாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அர்ச்சனா (20)  என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும்  வெவ்வெறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால், இவர்களது காதலுக்கு அர்ச்சனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத னால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த  ஜூன் 28 ஆம் தேதியன்று விஜய் – அர்ச்சனா  திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்  ஈரோடு கள்ளுக்கடைமேடு, ஈவிஆர் வீதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திங்க ளன்று அர்ச்சனாவை விஜய் இருசக்கர வாக னத்தில் வேலைக்கு அழைத்துச் செல்லும் போது, அங்கு காரில் வந்த அர்ச்சனாவின் பெற்றோர் உட்பட 6 பேர் அர்ச்சனாவை வலுக் கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்ற னர். இதுகுறித்து ஈரோடு தெற்கு காவல்  நிலையத்தில் விஜய் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், அர்ச்சனாவின் தந்தை செல்வம் (45), தாய் கவிதா (42), பவானி ஒலகடத்தைச் சேர்ந்த பழனிசாமி (45), அவரது நண்பர்களான அந் தியூர் பச்சாம்பாளையத்தைச் சேர்ந்த கரு மலையான் (35), சண்முகம் (46), யுவராஜ் (35)  ஆகியோர் அர்ச்சனாவை கடத்திச் சென்றது  தெரியவந்தது. இதையடுத்து 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து செய்து கைது செய்து, அர்ச்சனாவை மீட்டனர்.