tamilnadu

img

நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாக உருவெடுத்த கேரளம்! பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பாராட்டு

நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாக உருவெடுத்த கேரளம்! பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பாராட்டு

திருவனந்தபுரம், பிப். 16 - இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும்  மாநிலங்களில் ஒன்றாக கேரளம் உருவெடுத் துள்ளது என்று ‘நோபல்’ பரிசு பெற்ற பொரு ளாதார அறிஞர் அமர்த்தியா சென் பாராட்டி யுள்ளார். ‘விஷன் 2031’ சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அமர்த் தியா சென், “கேரளாவின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறைகளில் ஏற்பட் டுள்ள வியத்தகு முன்னேற்றங்கள், மாநிலத் தின் வளர்ச்சி நோக்குநிலையின் வெற்றி” என்று  குறிப்பிட்டார்.  வறுமை ஒழிப்பில் நாட்டிற்கே வழிகாட்டி வறுமை ஒழிப்பு, ஆயுட்காலம் மற்றும் தனி நபர் வருமானம் ஆகியவற்றில் கேரளம் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்வதாக வும் அவர் சுட்டிக்காட்டினார். 1957-ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்த லின் உற்சாகத்தை நினைவுகூர்ந்த அவர், “அப்போது காலேஜ் ஸ்ட்ரீட்டில் உள்ள காபி ஹவுஸ்களில், கேரளத்தின் இடது அரசியல் பாதையில் மக்களை முன்னேற்ற முடியுமா என்று தீவிர விவாதங்கள் நடந்தன. கேரளம் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்ததால், வளர்ச்சிக்கான நிதியைக் கண்டுபிடிக்க முடி யாது என்று பலர் என்னிடம் வாதிட்டனர். ஆனால்,  கேரளம் இன்று ஒவ்வொரு துறையிலும் முன் னணியில் நிற்கிறது. அந்தப் பழைய சந்தேக வாதிகள் அனைவருக்குமே நான் இப்போது எனது செலவில் காபி பார்ட்டி தரத் தயார். கேர ளத்தின் மனிதவள மேம்பாடு குறித்த எனது எதிர்பார்ப்புகள் தவறாக இல்லை” என்றும் அமர்த்தியா சென் பெருமிதத்துடன் கூறினார். மதச்சார்பின்மையை கட்டிக்காக்கும் கேரளம் “இந்தியாவின் பல பகுதிகளில் மதச்சார் பின்மை மோசமடைந்துள்ள நிலையில், கேரளத் தில் அதற்கு பெரும் சவால்கள் எதுவும் இல்லை”  என்று தமது நிம்மதியை பகிர்ந்து கொண்ட அமர்த்தியா சென், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மதச்சார்பற்ற மதிப்பீடுகள் தாக்குத லுக்கு உள்ளாகியுள்ளன, ஆனால் கேரளம் பேணிவரும் ஜனநாயக உணர்வு பெரும் நம்பிக்கையை அளிக்கின்றது” என்றார். கேரளத்தை உற்றுக் கவனித்த உலகம் “நாட்டில் தற்போது குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல் திணிக்கப்படும் நிலையில்,  அதனை வலுவாக எதிர்ப்பதில் தான், இந்தியா வின் எதிர்காலம் இருக்கிறது,” என்றும்; பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரம் தொடர் பான விஷயங்களில், கேரளத்தின் உயர்  தரநிலைகளை உலகம் பல பத்தாண்டுகளுக்கு  முன்பே கவனித்ததாகவும் அமர்த்தியா சென்  சுட்டிக்காட்டினார். உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் அறிவு மற்றும் கலாச்சாரங்களை வர வேற்று, கேரளம் இந்தியாவின் நுழைவாயி லாகச் செயல்பட்டு வருவதாகவும், மதச்சார் பின்மை மற்றும் பன்முகத்தன்மை, கேரள அடையாளத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.