குஜராத்தில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பாஜக ஆளும் குஜராத் மாநிலம்
அகமதாபாத் (15 பள்ளிகள்) மற்றும் வதோதரா (11 பள்ளி கள்) மாவட்டங்களில் உள்ள 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அத னால் விடுமுறை அளிக்கப்பட்டு 26 பள்ளி வளாகங்களிலும் உடனடியாக சோதனை கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே வழக்கம் போல இது வெறும் புரளி என குஜராத் காவல்துறையினர் அறிவித்து, மிரட்டல் விடுத்த நபர்களை தேடி வரு கின்றனர். 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கர்நாடக மாநிலத்தில் உள்ள 2 நீதி மன்றங்களுக்கு திங்களன்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கர்நா டக உயர்நீதிமன்றத்தின் தார்வாட் கிளை மற்றும் மண்டியா மாவட்ட நீதிமன்றங்க ளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டலைத் தொடர்ந்து 2 நீதிமன்றங்களி லும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப் பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காத தால், இது வெறும் புரளி என காவல் துறையினர் அறிவித்தனர்.
