states

img

ரூ.400 கோடி எங்கே?

ரூ.400 கோடி எங்கே?

பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே 2025ஆம் ஆண்டு அக்., 22 அன்று செல் லாததாக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டு கள் அடங்கிய ரூ. 400 கோடி பணம் இருந்த லாரியில் கொள்ளையடித்த தாகக் கூறியும், 7  பேர் தன்னை வழி மறித்துக் கடத்தி தாக்கியதாகவும் ஓட்டுநர் (லாரி) சந்தீப் பாட்டீல் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இகத்புரி பகுதியில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 5 மாத தீவிர விசாரணைக்குப் பிறகு நாசிக் கிராமப்புற காவல்துறை அறிக்கை வெளி யிட்டது. அதில்,”அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஓட்டுநர் அளித்த புகார் பொய்யானது” என அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட 7 பேரும் விடுவிக்கப் பட்டனர். பணம் எங்கே? இந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. உண்மை யில் செல்லாது என அறிவிக்கப்பட்ட  2,000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ. 400 கோடி பணம் லாரியில் கொண்டு செல்லப்பட்டதா? ஓட்டுநர் பணத்தை கொள்ளையடித்ததாக கூறியது பொய் என்றால்? அங்கு நடந்தது என்ன? ஓட்டு நர் பணத்தை கொள்ளையடித்தாரா? கொள்ளையடித்த பணம் எங்கே சென்றது? முதலில் லாரி எங்கே? லாரி யில் இருந்த பணம் எங்கே? என பல்வேறு சர்ச்சைகளுடன் கேள்விகள் எழு கின்றன.