பாலியல் புகாருக்கு உள்ளானவர் எம்எல்ஏ-வாக தொடர்வது சரியல்ல கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
திருவனந்தபுரம், ஆக.27- கேரள சட்டமன்ற உறுப்பினர் ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிரான பாலியல் புகார்களுடன் அவர் எத்தனை காலம் அந்த பதவியில் நீடிக்க முடியும் எனவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட கேரள சமூகம் ஏற்கனவே அவரை நிராகரித்து விட்டதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர் களிடம் இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது: ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுடன் சட்டமன்ற உறுப்பினர் போன்ற உயர்ந்த பதவில் ஒருவர் நீடிக்கக்கூடாது என்கிற கருத்து மேலோங்கி உள்ளது. ஆனால், இதுவரை அதுபோன்ற நிலையை இதில் பார்க்க முடியவில்லை. இதே நிலையை எத்தனை காலம் தொடர முடியும். சமூ கத்தில் கடும் எதிர்ப்புக்கு இச்சம்பவம் உள்ளாகி இருக்கிறது. காரணம் ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்கள் குறித்த புகார்கள் வெளியாகி உள்ளன. இளம்பெண்ணை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்துவது போன்ற குரல் பதிவுகள் வெளியாகி உள்ளன. எந்த அள வுக்கு குற்றகரமானவை வெளிப்பட்டி ருக்கின்றன என்பதை சிந்திக்க வேண்டும். நமது சமூகத்தில் பொது செயற்பாட்டாளர் களுக்கு ஒரு அங்கீகாரம் உள்ளது. அதில் களங்கம் ஏற்படுத்தும் சில நிகழ்வுகள் சில நேரங்களில் ஏற்படுவதுண்டு. ஆனால், இந்த அளவுக்கு சென்ற ஒரு செயல் இது வரை கேள்விப்படாதது. ஒரு பொது செயற்பாட்டாளருக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது கடுமையான நிலைப்பாடு மேற்கொள்ள வேண்டும். ஆனால், இங்கு அனைத்தும் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அணுகப்படு கிறது. மாநிலத்தில் மிகவும் முக்கியமான பதவி எதிர்கட்சி தலைவர் என்பது. இந்த பிரச்ச னையில் அவரது வெளிப்பாடை சமூகம் கவனிக்கும். இப்போது காங்கிரசுக்குள் இது தொடர்பாக மாறுபட்ட குரல்கள் எழுந்து வருகின்றன. அரசியல் செயல்பாட்டுக்கு தார்மீக ரீதியிலான மதிப்பும் மரியாதையும் உண்டு. அதை இழப்பது குறித்த மன வருத்தத்தை காங்கிரசில் பலரும் பிரதிபலித்துள்ளனர். இந்த அளவுக்கு கடுமையான குற்றச் சாட்டுகளுக்கு உள்ளானவரை பாதுகாக்க எதிர்கட்சி தலைவர் முயற்சிக்கக் கூடாது. இது அத்தகைய நபருக்கு பாதை வகுத்து ஊக்கப்படுத்துவதாகும். இது இனியும் எத்தனை பேரிடம் பற்றிப்படரப்போகிறது என்பதும் அறிந்துகொள்ள முடியாதது. சட்டப்படி வரும் புகார்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். புகார் அளிக்க யாரும் அச்சடைய வேண்டாம். அனைத்து விதமான பாதுகாப்பையும் அரசு அவர் களுக்கு வழங்கும் என முதல்வர் கூறினார்.